கோவிட்-19 தாக்குதல் காரணமாக விஸ்மா பெல்கிரா வளாகம் மூடப்படுகிறது

ஸ்தாப்பாக் ஜெயா விலுள்ள விஸ்மா பெல்கிரா வளாகம் நேற்று புதன் கிழமையிலிருந்து எதிர்வரும் மார்ச் 6 வரை மூடப்படுகிறது என நேற்று அறிவிக்கப் பட்டது. அக்கம்பெனியின் இயக்குநர் வாரியத்தின் உறுப் பினர் ஒருவர் கோவிட் 19வினால் தாக்கப்பட்டது கண்டறியப்பட்டதின் தொடர்பாக அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அந்நிறுவனத்தின் அறிக்கை ஒன்று கூறியது. அந்த பெல்கிரா தலைமைய கத்தின் நடவடிக்கைகளும் அலுவலகப்பணிகளும் உடனடியாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன என்று பெல்கிரா பெர்ஹாட்டின் செயல் முறை அதிகாரி முகமட் நஸ்ரூல் இஸாம் மன்சோர் கூறினார். அவ்வளாகத்தை சுத்தப் படுத்தும், நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என அவர் கூறினார்.

வீட்டிலிருந்தே பணிகளைத் தொடருமாறு ஊழியர் களுக்கு ஆலோசனை கூறப் பட்டிருக்கிறது. அழைப்பதற்கு எளிதாக இருக்கும் பொருட்டு, மாவட்டத்தை விட்டு வெகுதூரம் போக வேண்டாம் என்று ஊழியர் களுக்கு அறிவுரை வழங்கப் பட்டிருக்கிறது. திங்கள் கிழமை பணிகள் வழக்கம் போல் நடைபெறும் என்று முகமட் நஸ்ருல் தெளிவு படுத்தினார். வட்டார மற்றும் பகுதி நிலையில் உள்ள பெல்கிரா அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும். பெல்கிரா விற்கு சொந்தமான பண்ணை கள் தொழிற்சாலைகளின் நடவடிக்கைகள் எந்த பாதிப்பும் அடையாமல் இருப்ப தற்கு வேண்டிய நடவடிக்கை கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இதற்கிடையே பாதிக்கப் பட்ட அந்த பெல்கிரா வாரிய உறுப்பினர் கடந்த பிப்ரவரி 25இல் விஸ்மா பெல்கிராவிற்கு வருகை புரிந்திருந்தார் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + thirteen =