கோவிட்-19 தாக்கத்தினால் பத்திரிகை வியாபாரம் மந்தம்

0

மஸ்ஜிட் இந்தியா, லெபோ அம்பாங்கிலுள்ள பத்திரிகை விற்பனை செய்யும் தொழிலாளர்கள் தமிழ்மலர் நாளிதழுக்காக நேர் காணல் செய்தனர். மாஜு அல்-பிஸ்மி ஸ்டோர் நிர்வாகி கூறும்போது காலை 7.00 மணிக்கு கடை திறந்து வைத்துள்ளோம்.
ஒரு அரை மணி நேரம் கழித்து கடையை மூட வேண்டும் என்று அதிகாரிகள் கூறுவதால் கடை மூடி வியாபாரம் செய்ய வேண்டியிருக்கிறது. இதனால், பத்திரிகைகள், வியாபாரம் குறைந்துள்ளது.
மேலும், கோவிட்-19 தாக்கத்தின் எதிரொலியாக ஆள் நடமாட்டம் குறைவாக இருப்பதால் பத்திரிகை வியாபாரம் சுமாராக உள்ளது என்றார்.


எஸ்பிஎம் டெலி கொமுனிகேஷன் பத்திரிகை விற்பனை செய்யும் தொழி லாளர்கள் எங்கள் கடைகளில் பத்திரிகை வியாபாரம் நன்றாகத்தான் உள்ளது. மேலும், இருக்கும் தொழிலாளர்கள் தமிழ்ப் பத்திரிகைகள் வாங்குவதில் ஆர்வமாக உள்ளனர்.
சீக்கிரமே பத்திரிகைகள் முடிந்து விடுகின்றன. பத்திரிகைகள் எங்களுக்கு குறைவாக உள்ளதால் நாங்கள் விற்று விட்டு கடையை மூட வேண்டிய நிலை ஏற்படுகிறது. மஸ்ஜிட் இந்தியா கடைகளில் பத்திரிகைகளை கொஞ்சம் அதிகமாக தரலாம் என்றனர்.
அதே போல தமிழ் மலர் வாசகர் டத்தோ மகேஸ்ராம் கூறும்போது, நான் தினந்தோறும் பத்திரிகையை வாங்குவேன். கடைகள் மூடப்பட்டுள்ளதால் பத்திரிகை கிடைப்பது சிரமமாக உள்ளது. கோவிட்-19 தாக்கத்தினால் வியாபாரிகள், பொதுமக்கள் அனைவரும் வெகுவாக பாதிப்படைந்துள்ளனர். பொருளாதாரமும் சரிந்துள்ளது. புதிதாக வந்திருக்கும் அரசாங்கம் அனைவருக்கும் ஒரு நல்ல அறிவிப்பை அறிவிக்க வேண்டும். எல்லோருக்கும் அவர்கள் ஏதாவது ஒரு வழியில் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × five =