கோவிட்-19க்குப் பிறகு வலுவான மீட்சியை எதிர்ப்பார்கிறது மலேசியா ஏர்லைன்ஸ்

தேசிய விமான நிறுவனமான மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் கோவிட்-19க்குப் பிறகு தனது வணிகத்தில் வலுவான மீட்சியை எதிர்பார்க்கிறது. மலேசியா ஏர்லைன்ஸ் குழுவின் தலைமை சந்தைப்படுத்தல் மற்றும் வாடிக்கையாளர் அனுபவ அதிகாரி லாவ் யின் மே கூறுகையில், “கோவிட் -19 நோய்த்தொற்றால் ஒரு சவாலான காலம் இருந்தபோதிலும், நாங்கள் ஒற்றுமையாக இணைந்து பணியாற்றினோம்” என்றார். “இந்த இக்கட்டான நேரத்தில் நாங்கள் ஊழியர்கள் பற்றாக்குறை பிரச்சினைகளியயும் எதிர்க்கொண்டோம். ஆனால், இது நடக்கும் என்று எங்களுக்குத் தெரியும். ஆகவே, நாங்கள் இப்பிரச்சினையை எதிர்கொள்ள நாங்கள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்திருந்தோம். “கோவிட்-19 நெருக்கடியிலும் நாங்கள் பல வேலை வாய்ப்புகளை உருவக்கி இருந்தோம். புதிய ஊழியர்களை தேர்ந்தெடுப்பதில் எங்களுக்கு சிறிது காலம் எடுக்கும். புதிய ஊழியர்களுக்கு பயிற்சி தர வேண்டும் என்பதால் எங்களுக்கு இந்த நேரம் தேவைப்படுகின்றது. “நோய்த்தொற்றுகளின் போது பல விமான நிறுவனங்கள் அதன் தொழிலாளர்களை கருத்தில் கொள்ளவில்லை. “இந்த சவாலான நேரத்தில் பல வேலை நீக்கமும் சம்பள குறைப்பும் ஏற்பட்டது. இருப்பினும், நாங்கள் எங்கள் ஊழியர்களைத் தக்க வைத்துக் கொண்டதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம்” என்று அவர் நேற்று ஓர் அறிக்கையில் கூறினார். கோவிட்-19 நோய்த்தொற்றால் ஏற்பட்ட விமான நிறுவனங்களின் நிதி சிக்கல்களால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். குறிப்பாக, யுனைடெட் கிங்டம் மற்றும் அமெரிக்காவில் உள்ள விமான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை குறைத்தது மட்டுமின்றி தற்போது போராடி வருகின்றன. மலேசியா ஏர்லைன்ஸ் தற்போது 1,049 விமானிகள் மற்றும் 2,034 கேபின் குழுவினர் உட்பட சுமார் 11,000 தொழிலாளர்களைப் கொண்டிருக்கின்றது. “தேசிய விமான நிறுவனமாக, சிறந்த விமான சேவைகளை வழங்குவதற்கும் நாங்கள் பல தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றோம்” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 − 8 =