கோவிட்-19ஐ கண்டறியும் பரிசோதனை நம்பத் தகுந்ததா?

நாட்டில் கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டோர் எத்தனை பேர் என்ற கேள்வியைத் தொடுத்த அன்வார் இப்ராஹிம் அந்நோயைப் பரிசோதிக்கும் திறன் மீது ஐயம் தெரிவித்தார். போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினரான அன்வார், அந்நோய் சம்பந்தமான சுகாதாரத்துறையின் அறிவிப்புகள் பாராட்டும்படி இருந்தாலும், உண்மையில் அந்நோய்க்கு ஆளானவர்கள் எத்தனை பேர் என்பதை விளக்க வேண்டுமென்று வலியுறுத்தினார்.
மேலும், அந்நோயைக் கண்டறிய மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முறையின் நம்பகத் தன்மையின் மீதும் அவர் கேள்வி எழுப்பினார்.
தாம் அதில் நிபுணராக இல்லையென்றாலும், பரிசோனையின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவருக்கு விமான நிலையத்தில் கோலாலம்பூர் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட என்டிஜன் ரேப்பிட் பரிசோதைனையில், அவருக்கு கோவிட்-19 தொற்று இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால், அவர் கூச்சிங் விமான நிலையத்தில் வந்தடைந்து, அங்கு நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில் அவருக்கு நோய் கண்டிருப்பது தெரிய வந்துள்ளது.
சரவாக்கில் மேற்கொள்ளப்படும் பிசிஆர் சோதனை துல்லியமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் ஒப்பிடும்போது, மலேசியாவின் பரிசோதனையின் தரம் திருப்திகரமாக இல்லை.
ஆஸ்திரேலியாவில் 1,000 பேருக்கு 1.98 என்ற விகிதாசாரத்தில் 183 பேருக்குத் தொற்று கண்டிருப்பதாகவும், கனடாவில் 1,000 பேருக்கு 1.03 விகிதாசாரத்தில் இருந்து, அங்கு 243 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளதாக அன்வார் சுட்டிக்காட்டினார்.
மலேசியாவில், 1,000 பேருக்கு 0.18 விகிதாசாரம் இருப்பதால், வெறும் 7 பேருக்கு மட்டுமே நோய் கண்டிருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
கோவிட்-19ஐக் கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு மேற்கொண்ட முன்னெடுப்புகள் போற்றத்தக்க வகையில் இருந்தாலும், நோயைக் கண்டறியும் சோதனை நடவடிக்கையை இன்னும் மேம்படுத்த வேண்டும்.
செவ்வாய்க்கிழமை வரை 855,119 பேரிடம் பரிசோதனை செய்யப்பட்டதில், 8,729 பேருக்கு நோய் தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் புதிதாக 4 பேருக்கு நோய்த் தொற்று இருப்பதாகவும் 83 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 8,524 பேர் நோயிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + eighteen =