கோவிட் மீட்புத் திட்டத்தில் முஹிடின் இருப்பது நியாயமில்லை

கோவிட் மீட்புத் திட்டக் கவுன்சிலின் தலைவராக பிரதமர் முஹிடின் யாசின் தலைமையேற்கக் கூடாது என்று பெஜுவாங்கின் தலைவர் முக்ரிஸ் மகாதீர் குறிப்பிட்டுள்ளார். கோவிட்-19 தொற்றினைக் கட்டுப்படுத்துவதில் முஹிடின் யாசின் தோல்வி அடைந்துள்ளதால், அவர் மேற்கண்ட பொறுப்புக்குத் தகுதியானவர் இல்லை என்று முக்ரிஸ் குறிப்பிட்டார். தேசிய மீட்புக் கவுன்சிலில் அரசுத் தலைவர்கள் இடம் பெறக்கூடாது என்று பெஜுவாங் வலியுறுத்தி வருவதாகவும், தொழில் நிபுணர்கள் அதனைத் தலைமையேற்று நடத்துவதோடு அது பேரரசரின் கீழ் இயங்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார். இதனிடையே, தேசிய மீட்புத் திட்டக் கவுன்சிலை தொழில் சார்ந்த நிபுணர்களும் அரசியல் சாராத தலைவர்களும் தலைமையேற்று நடத்த வேண்டுமென்று துன் மகாதீர் வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. கோவிட்-19 தொற்றினைத் தடுக்க வரலாற்றில் இல்லாத அளவுக்கு முஹினிடம் நிதி வழங்கப்பட்டது. ஆனால், அவர் அவசரகாலத்தை விதித்ததோடு, தன்முப்பாகக் காரியங்களை ஆற்றி தோல்வியடைந்துள்ளார். அவர் சுகாதார நெருக்கடியைத் தீர்ப்பதில் தோல்வி அடைந்துள்ள நிலையில் தேசிய மீட்புக் கவுன்சிலின் தலைவர் பொறுப்பை வகிக்கக் கூடாதென்று முக்ரிஸ் மகாதீர் திட்டவட்டமாக வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six + 17 =