கோவிட் தாக்கத்தில் ஜொகூர் தேர்தல் தேவையா??

கோவிட்டில் இருந்து முழுமையாக விடுபடாத நிலையில் ஜொகூர் மாநில இடைத் தேர்தல் தேவையில்லாத ஒன்று என பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார் கூறினார்.சபா தேர்தலில் என்ன நடந்தது என்பதை நாம் பார்த்தோம். இப்பொழுது இத்தேர்தல் அம்னோவின் உட்பூசலினால் எழுந்துள்ளது. கோவிட் தொற்றுக்கு நடுவே இது அவசியமில்லாதது. அம்னோவின் சுயநலத்திற்காக செய்யப்படும் தேர்தல் மக்கள் நலனுக்காக அல்ல என அவர் சொன்னார்.
மக்கள் நலனைக் கருதில் கொண்டு செயல்படுவதை விட அம்னோ ஆட்சியைக் கைப்பற்றவே நினைக்கின்றது. மேலும், தேர்தலினால் மக்கள் பணம் வீணாகிறது. எதிர்க்கட்சியினர் இந்த கால கட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய முடியாது. அது ஆளுங்கட்சிக்கு சாதகமாக அமையும். எஸ்ஓபியில் ஜனநாயக அம்சங்கள் மறைந்து போகின்றன.
பொதுத் தேர்தல் நெருங்கி விட்டது. அதற்குள் இடைத்தேர்தல் வாக்காளர்களுக்குச் சுமையாகும் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × two =