கோல லங்காட் மாநகர் மன்றம் சாலை தன்மைகளை மேம்படுத்தும்

கோல லங்காட் மாவட்டத்தில் உள்ள சாலைகளின் தற்போதைய தன்மைகளைக் கண்டறிந்து அதன் தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும்.
இவ்வட்டாரத்தில் நடக்கும் சாலை விபத்துகளைத் தவிர்ப்பதற்கு அப்பகுதியில் சாலை அறிவிப்புப் பலகைகளை பொருத்துதல், பள்ளமாக உள்ள இடங்களைச் சீரமைத்தல், வளைவுப் பகுதிகளில் விளக்குகளைப் பொருத்துதல் போன்ற நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்வார்கள் என்று மன்றத்தின் தலைவர் டத்தோ அமிருல் அஸிஸான் தெரிவித்தார்.
அண்மையில் அலுவலக அதிகாரிகள், மாநகர் மன்ற உறுப்பினர்களுடன் நடத்தப்பட்ட சந்திப்பில் அவர் இத்தகவலைக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 − eight =