கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் எல்லா ஆலயங்களும் திறப்பு

கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் உள்ள அனைத்து ஆலயங்களும் ஜூலை 1ஆம் தேதி முதல் திறக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
கோலாலம்பூர் ஜாலான் துன் எச்.எஸ்.லீயில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயமும் ஜாலான் புடுவில் உள்ள கோட்டுமலை ஸ்ரீ கணேசர் ஆலயமும் திறக்கப்படும்.
அதோடு பத்துமலையில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்துடன் அதன் கீழ் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வேலாயுதர் சுவாமி ஆலயம், ஸ்ரீ வள்ளி தெய்வானை முருகன் சன்னிதானம், ஸ்ரீ சனீஸ்வரன் சன்னிதி, ஸ்ரீ அலமேலு மங்கல சமேத ஸ்ரீ வெங்கடாசலபதி சன்னிதி, ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் சன்னிதி, ஸ்ரீ மீனாட்சி அம்மன் சன்னிதி, ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னிதி ஆகிய 9 ஆலயங்களும் திறக்கப்படும்.
ஆலயத்தில் அரசின் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என ஆலயம் அறிவித்துள்ளது.
அதில் கை, கால்கள் கழுவுவது, உடல் வெப்பநிலை 37.5க்கு மேல் இருக்கக்கூடாது. கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது, ஒரு மீட்டர் இடைவெளியைக் கடைப்பிடிப்பது, ஆலயத்தில் கொடுக்கப்படும் பிரசாதம் மட்டுமே எடுத்துச் செல்வது, ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ள பதிவேட்டில் பெயர், தொலைபேசி எண், முகவரி, உடல்வெப்பநிலை அளவு பதிய வேண்டும்.
வரும்போது உடன் அடையாள அட்டையைக் கொண்டு வர வேண்டும். 12 வயதுமுதல் 70 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.
இரத்த அழுத்தம், இனிப்பு நீர், இருதய நோயாளிகள் ஆலயத்திற்கு வருவதைத் தவிர்க்க வேண்டும்.
ஆலய நிர்வாகப் பணியாளர்கள் ஆலயத்தின் உள்ளே இருக்க வேண்டியவர் களின் எண்ணிக்கையைக் கண்காணிப்பார்கள். பக்தர்கள் ஆலயத்தின் உள்ளேயும் வெளியேயும் கூட்டமாக இருக்க அனுமதிக்கப்படமாட்டார்கள்.
இதில் முக்கியமாக மலேசியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine + 4 =