கோலாலம்பூர் மருத்துவமனையில் தீ

நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு கோலாலம்பூர் மருத்துவமனையின் நான்காவது மாடியில் ஏற்பட்டத் தீ விபத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பு கருதி அங்குள்ள நோயாளிகள் மருத்துவமனையின் வளாகத்திற்கு வெளியேற்றப்பட்டனர்.
சனி இரவு 11.07 மணியளவில் இச்சம்பவம் குறித்த அழைப்பு வந்தவுடன், தித்திவங்சா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தடயவியல் உட்பட எட்டு உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக நடவடிக்கை பிரிவு அதிகாரி, ஹம்ஸா முஹமட் இசா கூறினார்.
அவர்கள் தீ சம்பவ இடத்தை வந்தடைந்ததும், கோப்புகள் சேமிக்கும் அறையில் தீ மூண்டதில், சுமார் 10 விழுக்காடு சேதமடைந்திருப்பதாக, ஹம்ஸா தெரிவித்தார். இதில், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இரவு 11.35 மணியளவில் தீயை கட்ப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும், சம்பவத்தின் காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் ஹம்ஸா கூறினார்.
இந்நிலையில், தீயணைப்பு மற்றும் மீட்பு குழு சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய பின்னர் நோயாளிகள் அதிகாலை 1 மணியளவில் அவர்கள் வார்டுகளுக்கு திரும்பினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten + 2 =