கோலாலம்பூர், சிலாங்கூர் டாக்சி ஓட்டுநர்கள் சங்கம் மூத்த உறுப்பினர்களைப் பாராட்டி கௌரவித்தது

மலேசியாவில் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் கோலாலம்பூர், சிலாங்கூர் ஜூவாரா லீமா இந்தியர் டாக்சி ஓட்டுநர்கள் சங்கம் தனது மூத்த உறுப்பினர்களை பாராட்டி சிறப்பித்துள்ளது.
கோலாலம்பூர், சிலாங்கூர் ஜூவாரா லீமா இந்தியர் டாக்சி ஓட்டுநர்கள் சங்கம் ஆண்டுதோறும் தனது உறுப்பினர்களின் மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது.
கோவிட் -19 நோய்த் தொற்றின்போது சங்க உறுப்பினர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை சங்கம் வாங்கிக்
கொடுத்து உதவி புரிந்தது. மேலும், சங்க உறுப்பினர்கள் பாதுகாப்பு நலன் கருதி 10,000 வெள்ளி மதிப்பில் இலவச குருப் காப்புறுதியும் பெற்றுத் தந்துள்ளது.
தற்போது சங்கத்தின் மூத்த உறுப்பினர்களான சண்முகம் இராமசாமி (வயது 63) மற்றும் செல்லத்துரை பழனியாண்டி (வயது 62) ஆகியோருக்கு சிறப்பு செய்து பாராட்டியுள்ளது.
சண்முகம் இராமசாமி, செல்வத்துரை பழனியாண்டி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களுக்கு மாலை அணிவித்து சங்க உறுப்பினர்கள் சிறப்பு செய்தனர்.
ஜூவாரா லீமா இந்தியர் டாக்சி ஓட்டுநர்கள் சங்கத் தலைவர் காந்தி சந்திரசேகரன், துணைத்தலைவர் லோகேந்திரன், செயலாளர் பிரேம் நாசிர், ஆலோசகர் ஆ.சந்திரன் மற்றும் சங்க உறுப்பினர்கள் ஒன்றுச் சேர்ந்து இவர்களுக்கு பாராட்டு செய்தனர்.
ஒவ்வொர் ஆண்டும் சங்கம் தனது மூத்த உறுப்பினர்களை சிறப்பித்து வருகிறது. அந்த வகையில் இம்முறை இவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டிருப்பதாக காந்தி சந்திரசேகரன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 5 =