கோலாலம்பூர்-சிலாங்கூர் எல்லை பிரச்சினைகளுக்கு தீர்வு

கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள எல்லைப் பிரச்சினைகளை தீர்ப்பதில் கூட்டரசுப்பிரதேச அமைச்சு இவ்வாண்டு கவனம் செலுத்தும் என்று அதன் அமைச்சர் காலிட் அப்துல் சமாட் கூறினார்.
நீண்ட நாட்களாக தீர்வு காணப்படாமல் உள்ள கோலாலம்பூர்- சிலாங்கூர் இடையிலான 18 எல்லைப் பிரச்சினைகள் நிலுவையில் உள்ளன என்றார் அவர்.
“இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சிலாங்கூர் நில மற்றும் சுரங்க இலாகா பரிந்துரைகளை வழங்கிவிட்டது. அவற்றை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். அனைவரும் அவர்களின் கருத்துகளை வழங்கி விட்டனர். கடவுளின் அருளால் எல்லைப் பிரச்சினைகளுக்கு நாம் அதிகாரப்பூர்வ தீர்வை காண்போம் என்றார் காலிட்.
இதற்கிடையில் 5வது தலைமுறை தொழில்நுட்பத்தை அமல்படுத்துவதன் மூலம் விவேக நகர்ப்புறத் திட்டத்தை மேம்படுத்தவும் தமது அமைச்சு திட்டமிட்டு வருகிறது என்றார் காலிட்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + three =