கோலாலம்பூர் சாலைப் போக்குவரத்து போலீஸார் அதிரடி சோதனை

கோலாலம்பூர் போக்குவரத்து போலீஸார் 2 நாட்கள் கோலாலம்பூர் சுற்று வட்டாரத்தில் சோதனை மேற் கொண்டனர். இச்சோதனையில் குண்டர் கும்பல், மோட்டார் சைக்கிள் பந்தயம் போன்றவை சோதனை யிடப்பட்டது என்று கோலாலம் பூர் சாலைப் போக்குவரத்து போலீஸ் தலைவர் ஏசிபி சரிபுடின் முகமட் சாலே தெரிவித்தார். இரவு 9.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை ஜாலான் துன் ரசாக், ஜாலான் லோக் இயூ, ஜாலான் பங்சார், ஜாலான் கூச்சிங், டூக் சாலைகளில் சோதனையிடப்பட்டது. இச்சோதனையில் 9 போலீஸ் அதிகாரிகளும் 61 போலீஸ் கான்ஸ்டபிள்களும் ஈடுபட்டனர். சட்டவிரோத மோட்டார் பந்தயத்தில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அவர் கூறினார். கைது செய்யப்பட்டவர்கள் 15லிருந்து 25 வயதுடையவர்களாவர். இந்த சோதனை நடவடிக்கையில் 984 சம்மன்கள் வழங்கப்பட்டன. 43 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − 10 =