கோலாலம்பூரில் கடும் மழை-வாகன நெரிசல் ஏற்பட்டது

நேற்று மாலையில் கோலாலம்பூர் வட்டாரத்தில் கடும் மழையின் காரணமாக பல இடங்களில் வெள்ளமும் அதனை தொடர்ந்து மரங்களும் விழுந்து வாகன நெரிசலை ஏற்படுத்தியது.

ஸ்தாப்பாக், ஜாலான் ரெஜாங், விஸ்மா பெல்க்ராவில் மரங்கள் விழுந்ததால் 8 கார்கள் சேதமுற்றதாகத் தீயனைப்பு இலாக்கா தெரிவித்தது. எனினும், யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை.

மேலும், கிள்ளான் ஆற்றில் நீர் பெருக்கெடுத்ததால் ஜாலான் துன் ராசாக் பிகேஎன்எஸ் அடுக்குமாடியை வெள்ளம் சூழ்ந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 − 8 =