இங்கு பாடாங் மேகா சுங்கை கராங்கானில் ஓர் ஆலயத்துக்கு அருகில் இந்திய இளம்பெண் ஒருவர் பிணமாகக் கிடந்த நிலையில் மீட்கப்பட்டார். அவரது உடலில் கடுமையான வெட்டுக்காயங்கள் இருந்தன. அவர் தூக்கில் தொங்கியது போன்று கயிறு கழுத்தில் இருந்தது. அவரது முகம் கருகியிருந்தது. அவரது தலைமுடி மழிக்கப்பட்டிருந்தது என்று தெரிய வருகிறது.
நேற்று வலைத்தளங்களில் காலை முதல் பரபரப்பாக வெளிவந்த செய்தியில் இந்தப் பெண் யார்? எப்படி இங்கு வந்து பிணமானார்? இது கொலையா? தற்கொலையா என்று எதுவும் சொல்லப்படவில்லை.
காவல்துறை உடலை மீட்டு சவப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தது. ஆனால் அவரைப்பற்றி எந்த விவரங்களும் சொல்லப்படவில்லை.
எனினும் சுமார் 17 லிருந்து 20 வயது மதிக்கத்தக்க அந்த இளம்பெண் ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்தவர் என்றும் கடந்த வியாழக்கிழமை வேலைக்குப் புறப்பட்டவர், அதன் பின்னர் அத்தொழிற்சாலையில் இருந்து வெளியேறினார் என்றும் அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை என்றும் அவரது குடும்பத்தினர் காவல்துறையில் புகார் செய்திருக்கிறார்கள்.