கோம்பாக்கில் தண்ணீர் விநியோகம் சீரடைந்தது

அம்பாங் பாய்ண்ட், ஜாலான் அம்பாங்கில் பழுதடைந்த தண்ணீர் குழாயைச் சரி செய்ததில் ஏற்பட்ட அட்டவணையற்றத் தண்ணீர் விநியோகத் தடையால் பாதிக்கப்பட்ட சிலாங்கூர், கோம்பாக்கிலுள்ள அனைத்துப் பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.00 தண்ணீர் விநியோகம் சீரடைந்து விட்டதாக ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் கூட்டுறவுத் தொடர்புப் பிரிவுத் தலைவர், எலினா பாசெரி தெரிவித்தார். இம்மாதிரியானக் குழாய்ப் பழுதுச் சம்பவங்கள் தொடர்பில் சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா பகுதிகளில் வசிக்கும் மக்கள் புகார் செய்வதன் மூலம் அவற்றை உடனடியாகப் பழுது பார்த்து விடலாம். இந்நிலையில் பொறுமையுடன் காத்திருந்து அட்டவணையற்ற தண்ணீர் விநியோகத் தடைப் பற்றி புரிந்து கொண்ட தன் பயனீட்டாளர்களுக்கு ஆயர் சிலாங்கூர் நன்றி தெரிவித்துக் கொள்கிறது. அதனால் பயனீட்டாளர்கள் அனைவரும் ஆயர் சிலாங்கூர் செயலி உட்பட எங்களின் அதிகாரப்பூர்வ முகநூல், இன்ஸ்டாகிராம், டுவீட்டரில் வலம் வந்து அல்லது 15300 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுவதாக ஓர் அறிக்கையில் எலினா பாசெரி குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 2 =