கோப்பிக் கடையில் பிரசாரம் செய்வதைத் தவிர்ப்போம்

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பிரசாரம் செய்ய தடைபோட்ட தால் முறையான பிரச்சாரம் மேற்கொள்ள முடியவில்லை. அதற்கு மாற்றாக அப்பகுதியில் உள்ள கோபி கடைகளில் 4 பேருடன் அமர்ந்து கோப்பி குடித்துவிட்டு பேசி வந்தோம். இது எந்தப் பயனும் அளிக்கவில்லை, பாதகமாகத் தான் அமைந்தது என பக்காத்தான் ஹராப்பான் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். இன்னும் மூன்று வாரங்களில் நடைபெறவிருக்கும் சரவாக் சட்டமன்றத் தேர்தலில் இதனை நாம் பின்பற்றக்கூடாது. முறையாக தேர்தல் பிரசாரம் செய்யப்பட வேண்டுமென அவர் கூறினார். அதற்கான நடவடிக்கை களையும், திட்டங்களையும் பக்காத்தான் கட்சிகள் ஏற்பாடு செய்ய வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 3 =