கொலை செய்யும்படி நஜிப் உத்தரவிட்டார்!

0

அதிர்ச்சித் தகவல்..!

மங்கோலிய அழகி அல்தான்துயா ஷாரிபுவை கொலை செய்யும் படி முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கும் அவரின் நெருங்கிய நண்பர் அப்துல் ரசாக் பகிண்டாவும் தமக்கு உத்தரவிட்டதாக காஜாங் சிறையில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள கொலைக் குற்றவாளி அஸிலா ஹாட்ரி அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளார்.
போலீஸ் படையின் சிறப்பு நடவடிக்கை பிரிவைச் சேர்ந்த ஓர் உறுப்பினர் என்பதால் ’சுட்டுக் கொல்லும் உத்தரவை தொடர்ந்து தாமும் சிருல் அஸார் உமாரும் அந்த மங்கோலிய பிரஜையை கொலை செய்ததாக அவர் முதல் முறையாக ஒப்புக் கொண்டார்.

கடந்த 2015 ஆம் ஆண்டில் தமக்கும் சிருலுக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறு பரிசீலனை செய்யும்படி கூட்டரசு நீதிமன்றத்திற்கு செய்துள்ள மனுவில் சத்தியபிரமாணத்தின் வழி இந்த தகவலை அவர் கூறியுள்ளார்.
அல்தான்துயாவை கைது செய்து அழிக்கும் படி நஜிப் உத்தரவிட்டதாக 2019 அக்டோபர் 17ஆம் தேதியிட்ட ஒரு சத்தியபிரமாணத்தில் அதிர்ச்சி தரும் இந்த குற்றச்சாட்டுகளை அஸிலா கூறியுள்ளதாக மலேசியா கினி கூறியது.
அல்தான்துயா ஒரு வெளிநாட்டு ’உளவாளி மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு ஒரு கடந்த 2015 ஆம் ஆண்டில் தமக்கும் சிருலுக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறு பரிசீலனை செய்யும்படி கூட்டரசு நீதிமன்றத்திற்கு செய்துள்ள மனுவில் சத்தியபிரமாணத்தின் வழி இந்த தகவலை அவர் கூறியுள்ளார்.
அல்தான்துயாவை கைது செய்து அழிக்கும் படி நஜிப் உத்தரவிட்டதாக 2019 அக்டோபர் 17ஆம் தேதியிட்ட ஒரு சத்தியபிரமாணத்தில் அதிர்ச்சி தரும் இந்த குற்றச்சாட்டுகளை அஸிலா கூறியுள்ளதாக மலேசியா கினி கூறியது.
அல்தான்துயா ஒரு வெளிநாட்டு ’உளவாளி மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு ஒரு மிரட்டலானவர் என்று அப்போது துணைப் பிரதமராக இருந்த நஜிப் என்னிடம் கூறினார். அந்த வெளிநாட்டு உளவாளியை கைது செய்து அழிக்கும்படி கூறியதற்கான அர்த்தம் என்ன? என துணைப் பிரதமரை நான் கேட்டேன், சுட்டுக் கொலை செய் மற்றும் கழுத்தை அறுத்து விடு என்று சைகை காட்டினார் என அந்த சத்தியபிரமாணத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அல்தான்துயாவை கொலை செய்ய உத்தரவிட்ட நஜிப், அவரிடம் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தினார். அல்தான்துயா கெட்டிக்காரத்தனமாக பேசி ஆளை மயக்கக் கூடியவர். உதாரணத்திற்கு அவர் தற்சமயம் கர்ப்பமாக இருப்பதாக கூட சொல்வார் என்று அவர் கூறினார்.
2018ஆம் ஆண்டே இந்த தகவலை வெளியிட விரும்பினேன். ஆனால் அப்பொழுது பொதுத் தேர்தல் காலமாக இருந்ததனால் இது சில தரப்பினரால் தவறாக பயன்படுத்தப்படும் என்ற காரணத்தினால் நான் அமைதியாக இருந்து விட்டேன்.
இப்பொழுது இந்த தகவலை வெளியிடுவதற்கு காரணம், நாட்டின் பாதுகாப்பிற்காக என்று கூறி என்னை இதை செய்ய வைத்து எனக்கு துரோகம் செய்யப்பட்டிருக்கிறது என்பதை நான் அம்பலப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் என்று அவர் கூறியுள்ளார்.
லண்டன்
சந்திப்பு
2016ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி நஜிப்பின் சொந்த ஊரான பெக்கானில் உள்ள அவரது இல்லத்தில் அவரைச் சந்தித்தேன்.
ஓர் அனைத்துலக உளவாளி ஒருவரை கொலை செய்யவேண்டும் என்று அவர் என்னிடம் கூறினார். அதையே, ரசாக் பகிண்டாவும் டாமான்சாராவில் உள்ள அலுவலகத்தில் சந்தித்த பொழுது என்னிடம் மீண்டும் கூறினார்.
அச்சமயம், லண்டனில் நானும் துணைப் பிரதமரும் (நஜிப்) லண்டனிலுள்ள ஒரு அடுக்குமாடி வீட்டின் நடைபாதையில் ஒருவரை சந்தித்ததை ஞாபகம் இருக்கிறதா என்று கேட்டார். அப்படி ஒருவரை சந்தித்து எனக்கு நினைவு இல்லை. ஆனால் துணை பிரதமராக இருந்த நஜிப் மற்றும் ரசாக் பகிண்டாவுடன் ஹோட்டலில் இருந்து ஒரு அடுக்குமாடி வீட்டிற்கு செல்லும் வழியில் அவர்களுடன் சென்றது மட்டும் நினைவில் இருந்தது. அப்பொழுது அவர்கள் லண்டனில் சந்தித்த அந்த பெண்தான் அந்த வெளிநாட்டு உளவாளி என்று ரசாக் பகிண்டாகுறிப்பிட்டார்.
பிறகு ரசாக் பகிண்டாவின் வீட்டிற்கு வெளியே அல்தான்துயாவை பார்த்த பொழுது, அந்தப் பெண்ணை தான் லண்டன் அடுக்கு மாடியில் வீட்டில் சந்தித்த நினைவு தனக்கு வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் நஜிப் அல்தான்துயாவை தான் சந்தித்ததே இல்லை என்று தொடர்ந்து கூறி வருவதுடன் மசூதியில் இது தொடர்பாக சத்தியம் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தக் கொலையை செய்வதில் வழி நாட்டின் பாதுகாப்பிற்கு தான் பணியாற்றுவதாக தமக்கு நம்பிக்கை அளிக்கப்பட்டது என்று அஸிலா
கூறிப்பிட்டுள்ளார்.
இந்த கொலை செய்து முடிக்கப்பட்ட பிறகு, இதனால் ஏற்படக்கூடிய அனைத்து விளைவுகளையும் துணைப்பிரதமர் (நஜிப்) கவனித்துக் கொள்வார். ஆனால் அவரது பெயரை இந்த விவகாரத்தில் எக்காரணத்தைக் கொண்டும் சம்பந்தப் படுத்தக் கூடாது என்று தங்களுக்கு உத்தரவிடப்பட்டது. ஆகவே நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான ஒரு விவகாரம்
தொடர்பான ரகசியத்தை நாங்கள் பாதுகாப்பதாகவே நம்பினேன்.
அதே நேரத்தில் எந்த நிலையிலும் துணைப்பிரதமர் (நஜிப்) மூலமாக எங்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்றும் நாங்கள் நம்பினோம் என்று அவர் தமது சத்திய பிரமாண வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பிறகு இவ்விவகாரம் வெளிப்பட்டு, போலீஸ் விசாரணையின்போதுதான் துணைப் பிரதமரின் (நஜிப்பின்) பெயர் இதில் சம்பந்தப் படுத்தப்பட்டது. துணைப் பிரதமரின் (நஜிப்பின்) ஈடுபாடு பற்றிய தகவல் கசிந்ததற்கு நான் தான் காரணம் என்று அவர்கள் எண்ணினார்கள். ஆனால் உண்மையில் போலீசிற்கு இந்த தகவல் சிரூல் மூலமாகத்தான் கசிந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கொலை தொடர்பான உத்தரவுகள் அனைத்தும் வாய்வழி உத்தரவுகளாகவே இருந்தன. எந்த எழுத்துப்பூர்வ உத்தரவுகளையும் நாங்கள் பெறவில்லை.
ஆனால் நாங்கள் பணியில் இருந்த அதிகாரிகள் என்பதனால், இதற்கான உத்தரவுகள் துணைபிரதமரிடம் (நஜிபிடம்) இருந்து நேரடியாக அவரது உதவியாளரான டிஎஸ்பி மூசா சஃப்ரியிடம் இருந்து பெறப்பட்டதனால்,
இது நாட்டின் பாதுகாப்பு குறித்த சம்பவம் என்ற நம்பிக்கையில் இந்த பணியை மேற்கொள்ள சம்மதித்தேன். மேலும் அச்சமயம் பாரிசான் நேஷனல் மிகவும் பலமாக இருந்ததோடு துணைப் பிரதமரின் (நஜிபின்) உத்தரவை மீறி நடப்பது அவரை சிறுமை படுத்துவதாக இருக்கும் என்று நான் எண்ணினேன் என்று இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட சம்மதித்ததற்கான காரணத்தை கூறியுள்ளார்.
2015ஆம் ஆண்டு கூட்டரசு நீதிமன்றம் உயர் நீதிமன்றத்தின் தூக்கு தண்டனையை மறு உறுதிப்படுத்திய பிறகு நான் மூசாவை தொடர்பு கொண்டேன். ஆனால் அவர் என்னை அமைதியாக இருக்கச் சொன்னார்.
அப்படி என்றால் நான் அனைத்து விஷயங்களிலும் வெளியிட்டு உண்மையை வெளிப்படுத்த போகிறேன் என்று கூறினேன். அதனால்தான் சிலாங்கூர் சுல்தானிடம் எனது கருணை மனுவை தாமதமாக பதிவு செய்தேன் என்று அவர் விளக்கியுள்ளார்.
அந்த தூய குடும்பத்தினரிடம் என்னை
மன்னித்து விடும் படி கேட்டுக் கொள்கிறேன் அப்பொழுது எனக்கு வேறு வழி இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இக்கொலை வழக்கை மறுவிசாரணை செய்யக்கோரி அஸிலா செய்துள்ள மனுவில் இணைக்கப்பட்டுள்ள சத்திய பிரமாண வாக்குமூலத்தில் மேற்கண்ட தகவலை அவர் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen + 16 =