கொலை – கொள்ளைக்கு நாங்கள் என்ன செய்ய முடியும்? – அமைச்சர் சீனிவாசன் கேள்வி

0

சென்னை:
நெல்லையில் பட்டப்பகலில் கொள்ளையர்கள் வீடு புகுந்து முன்னாள் பெண் மேயர், அவருடைய கணவர் உள்பட 3 பேரை படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரு பக்கம் சென்னையில்  ரூட் தல சம்பவம் தொடர்பாக கல்லூரி மாணவர்களுக்கிடையே பேருந்திற்குள் பட்டாக்கத்தியுடன் மோதிய சம்பவம் சென்னை மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

 நெல்லை முன்னாள் மேயர் உமா மகேசுவரி

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய  வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், 
குற்றவாளிகள் திருந்தினால் மட்டுமே, தமிழகத்தில் குற்றங்கள் குறைய வாய்ப்பு உள்ளது.  கொலை – கொள்ளை சம்பவங்களுக்கு அரசு எப்படி பொறுப்பு ஆகும்? என கேள்வி எழுப்பினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − 8 =