கொரோனா வைரஸ்: விமான நிறுவனங்கள் தயார் நிலை

0

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் சீன நாட்டிலிருந்து மலேசியர்களைக் கொண்டு வருவதற்கு உதவி செய்ய மலேசிய ஏர்லைன்ஸ் (மாஸ்), ஏர் ஏசியா மற்றும் மலிண்டோ விமான நிறுவனங்கள் தயார் நிலையில் இருப்பதாகக் கூறுகின்றன. எனினும் எந்த திட்டமிட்ட வெளியேற்ற நடவடிக்கை குறித்தும் மேற்கொண்டு அரசாங் கத்தால் வெளியிடப்படும் தகவல்களின் அடிப்படையில் இப்பணியை அந்நிறுவனங்கள் மேற்கொள்ளும் என்று துணை சுற்றுலாத்துறை அமைச்சர் முகமது பக்தியார் வான் சிக் நேற்றுக் கூறினார்.
அந்த மூன்று விமான நிறுவனத்துடன் – மாஸ், ஏர் ஏசியா, மலிண்டோ நான் பேசியிருக்கிறேன். சீனாவில் உள்ள மலேசியத் தூதரகத் துடன் ஒத்துழைப்பதற்கு அந்நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. பாதிக்கப்பட்ட மலேசியர்களைக் கண்டறிந்து மலேசியாவிற்கு கொண்டு வருவதற்கு அந்நிறுவனங்கள் அத்தூதரகத்துடன் ஒத்துழைக்கும்.
நாங்கள் புதிய அறிவிப்புகளுக்காக காத்திருக்கிறோம். எனினும் அந்த விமான நிறுவனங்கள் ஒத்துழைப்பதற்கு தயார் நிலையில் இருக்கின்றன என்று அவர் நிருபர்களிடம் கூறினார்.
அதற்கு முன் கிள்ளான் ஹோக்கியான் சங்கத்தில் நடைபெற்ற சீன புத்தாண்டு வைபவத்தில் சுற்றுலாத்துறை துணையமைச்சர் கலந்து கொண்டார். நிதியமைச்சர் லிம் குவான் எங்கும் கிள்ளான் சீன வர்த்தக சங்கமும் இணைந்து அவ்வைபவம் நடத்தப்பட்டது.
தற்போது சீனாவின் ஷஹான் நகருக்கான தங்களின் அனைத்து விமானச் சேவை களையும் ஏர் ஏசியா மற்றும் மலிண்டோ தற்காலிகமாக ரத்து செய்து விட்டன.
இன்னும் சில தினங்களில் மலேசியாவிலுள்ள சுற்றுலாத்துறையைச் சார்ந்தவர்களைச் சந்தித்து பேசப் போவதாகவும் பக்தியார் கூறினார். தற்போது சீனாவிலிருந்து வரும் சுற்றுப்பயணிகள் எதிர் நோக்கும் பிரச்சினைகளைப் பற்றி அச்சந்திப்பில் விவாதிக்கப் போவதாக அவர் கூறினார்.
குறிப்பாக ஆன் லைன் பயண நிறுவனங்கள் சீனாவிலிருந்து வரும் பயணிகளின் ஹோட்டல் அறை பதிவுகளை ரத்து செய்யும்படி கோரிவருகின்றன.
இதுவரை மலேசியாவில் நான்கு நபர்களுக்கு இவ் வியாதி தொற்றியுள்ளதாகவும் சீனாவில் 56 பேர் இவ்வியாதி யினால் மரணம் அடைந்திருப்ப தாக துணையமைச்சர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here