கொரோனா வைரஸ் பாதிப்பால் சுற்றுலாத்துறை 3 பில்லியன் ரிங்கிட் இழப்பு

0

சுற்றுலாத்துறை சார்ந்த தொழில்களில் விடுதி நடத்துநர், சுற்றுலா முகவர்கள், சுற்றுலாவை மையமாகக் கொண்ட உணவகங் கள் என்று வெளிநாட்டு சுற்றுலாத் துறையை நம்பியிருக்கும் வர்த்த கர்கள் கடந்த இரண்டு மாதங் களாக பெரும் பாதிப்பில் உள்ள னர்.
‘கொவிட் 19’ எனப்படும் கொரோனா வைரஸ் பாதிப்பைத் தொடர்ந்து விமானங்கள் தனது சேவைகளை ரத்து செய்துள்ளன. இதன் காரணமாக இத்துறை பெரும் நெருக்கடியை எதிர் நோக்கி உள்ளது.

கடந்த 2 மாதங்களில் ஏறக்குறைய மூன்று பில்லியன் ரிங்கிட் இழப்பு இத்துறைக்கு ஏற்பட்டுள்ளது. கோத்தா கினபாலுவில் சுற்றுலாத் துறை மீட்சி பெறும் திட்டம் எனும் ஆய்வரங்கில் கலந்துகொண்டு உரையாற்றிய சுற்றுலாத்துறை அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ நோர் ஸாரி ஹமாட் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக சுற்றுலாத் துறை தலைமை இயக்குநர் டத்தோ மூசா யூசுப் கூறுகையில், சுற்றுலாத் துறை சார்ந்தவர்கள் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் மத்திய ஆசிய நாடுகள் ஆகியவற்றில் தங்களின் கவனத்தை செலுத்த வேண்டும் என்று கருத்துரைத்தார். அதனைப் போலவே உள் நாட்டு சுற்றுப் பயணிகளை அதிகமாக ஈர்க்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 5 =