கொரோனா வைரஸ் பரவி வருவதால் ஓரின சேர்க்கையாளர்கள் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் – ஐ.நா. பொதுச்செயலாளர் எச்சரிக்கை

0

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 17-ந் தேதி ஹோமோபோபியா, பிபோயியா, டிரான்ஸ்போபியாவுக்கு எதிரான சர்வதேச நாளாக கடைபிடிக்கப்படுகிறது.
இந்த நாள் எல்.ஜி.பி.டி.ஐ. என்று அழைக்கப்படுகிற ஓரின சேர்க்கையாளர்கள், இரு பாலுறவினர், திருநங்கையர் உள்ளிட்டவர்கள் நலனுக்காக கடைபிடிக்கப்படுகிறது.

எல்.ஜி.பி.டி.ஐ.

இந்த நாளையொட்டி ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் நேற்று ஒரு செய்தி விடுத்துள்ளார். அந்த செய்தியில் அவர், கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவி வருகிறபோது, அது மாற்று பாலுறவு சமூகத்தினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளார்.

மேலும், “இந்த சமூகத்தை பாதுகாப்பது சமூகத்துக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ள தருணம் இது. அவர்கள் பாரபட்சம், தாக்குதல், கொலை உள்ளிட்டவற்றை எதிர்கொள்கிற நேரத்தில், சுகாதார சேவைகளை நாடும்போது, புதிய தடைகளையும் சந்திக்கிறார்கள். இந்த சமூகத்தினரையும், அவர்களது சமூக அமைப்புகளையும் குறி வைக்க கோவிட்-19 உத்தரவுகளை போலீஸ் துறையினர் தவறாக பயன்படுத்தி உள்ளனர்” என தெரிவித்துள்ளார்.
பாகுபாடுகளுக்கு எதிராகவும், கண்ணியமாகவும், உரிமையுடனும், சுதந்திரமாகவும், சமமாகவும் வாழ அனைவருக்கும் உரிமை உண்டு என்றும் அவர் தனது செய்தியில் சுட்டிக்காட்டி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × one =