கொரோனா வைரஸ் நோய்க்கு சிகிச்சை அளிக்க 26 மருத்துவமனைகள் தேர்வு

0

கொரோனா வைரஸ் கிருமியினால் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க நாடு முழுமையும் 26 மருத்துவமனைகளின் பட்டியலை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
தீபகற்ப மலேசியாவில் 15 மருத்துவமனைகளும் சபாவில் நான்கும் சரவாக்கில் ஆறும் லாபுவானில் ஒன்றும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. பெர்லிஸில் கங்கார் தெங்கு பவுஸியா மருத்துவமனை, ஜோர்ஜ் டவுனில் பினாங்கு மருத்துவமனை, கெடா அலோர்ஸ்டாரில் சுல்தானா பஹியா மருத்துவமனை, லங்காவியில் பாடாங் மட்சிராட் மருத்துவமனை, பேராவில் ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனை, சிலாங்கூரில் சுங்கை பூலோ மருத்துவமனை, கோலாலம்பூர் பெரிய பொது மருத்துவமனை, நெகிரி செம்பிலானில் சிரம்பான் துவாங்கு ஜாஃபார் மருத்துவமனை, மலாக்கா மருத்துவமனை, ஜொகூரில், ஜொகூர்பாரு சுல்தானா அமினா மருத்துவமனை ஆகியவை தீபகற்ப மலேசியாவில் பட்டியலிடப்பட்டுள்ளன. கிளந்தானின் கோத்தா பாரு ராஜா பெரெம்புவான் ஸைனாப் மருத்துவமனை, கோலகிராய் அல்லது தும்பாட் மருத்துவமனை, திரெங்கானுவில் சுல்தானா நுர் ஸஹிரா மருத்துவமனை மற்றும் பகாங்கில் குவாந்தான் தெங்கு அம்புவான் அஃப்ஸான் மருத்துவமனை ஆகியவை நியமிக்கப்பட்டுள்ளன.
சபாவில், கோத்தா கினபாலு குயின் எலிசபெத் மருத்துவமனை, சபா மகளிர் மற்றும் சிறுவர்களுக்கான மருத்துவமனை, சண்டாக்கானில் டச்சஸ் ஆஃப் கெண்ட் மருத்துவமனை, தாவாவ் மருத்துவமனை, லாஹாட் டத்து மருத்துவமனை, கெனிங்காவ் மருத்துவமனை, லாபுவான் மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகள் நியமிக்கப்பட்டுள்ளன.
சரவாக்கில், கூச்சிங் பொது மருத்துவமனை, மிரி மருத்துவமனை, பிந்துலு மருத்துவமனை, சிபு மருத்துவமனை ஆகியவை பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
கொரோனா வைரஸ் நாட்டில் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருந்தாலும் இது வரை நாட்டில் சீன நாட்டவர்கள் நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 + 12 =