கொரோனா வைரசால் ஹாங்காங்கில் ஒருவர் மரணம் – சீனாவுக்கு வெளியே 2-வது பலி

0

சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வைரஸ் சீனாவில் உள்ள 33 மாகாணத்தில் பரவியது. சீனாவை தவிர மேலும் 24 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது.

இந்தநிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஹாங்காங்கை சேர்ந்த ஒருவர் பலியாகி உள்ளார்.

சீனாவில் உள்ள உகான் நகரில் இருந்து திரும்பிய 39 வயதானவருக்கு கொரோனா வைரஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஹாம்போகார்டன் பகுதியை சேர்ந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவுக்கு வெளியே 2-வது நபர் பலியாகி உள்ளார். ஏற்கனவே பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவர் இந்த வைரசால் உயிரிழந்தார்.

கொரோனா வைரசால் சீனாவில் மட்டும் இதுவரை 425 பேர் பலியாகி உள்ளனர். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − two =