கொரோனா பிரச்சினைக்கு மத்தியிலும் இசிஆர்எல் திட்டமிட்டபடி தொடர்கிறது

0

கொரோனா வைரஸ் பரவல் மத்தியிலும் கிழக்குக் கரை இருப்புப் பாதைத் திட்டம் (இசிஆர்எல்) தடையில்லாமல் மேற்கொள் ளப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் நேற்று அறிவித்துள்ளார்.
கிள்ளான் துறைமுகத்தையும் கோத்தா பாருவையும் இணைக்கும் இப்பாதைத் திட்டம் சுமார் 15 விழுக்காடு பூர்த்தியடைந்து விட்டது. இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள 13 சீன நாட்டுத் தொழி லாளர்கள் சீனப் புத்தாண்டை முன்னிட்டு தாயகம் திரும்பிய நிலையில், இந்நோய் பரவல் நிமித்தம் அங்கேயே தங்கி விட்டனர்.
ஆனால், அவர்கள் இல்லாமலேயே இங்குள்ள பணித் திட்டங்கள் பாதிக்
கப்படவில்லை. இருப்புப்பாதை அமைக்கும் பணிகளில் பெரும்
பாலும் உள்நாட்டுத் தொழி லாளர்களே ஈடுபட்டுள்ளதால், அதன் தாக்கம் அதிகம் உணரப் படவில்லை.
இத்திட்டத்துக்கு நிதியளிக்கும் சீனாவின் நிதியகங்களும், கட்டணம் செலுத்துதலை ஒத்தி வைக்க எந்த கோரிக்கையையும் முன் வைக்காததால், திட்டமிட்டப் படி ஜனவரி 2027இல் அப்பாதை செயல்படத் தொடங்கும் என்ற
நம்பிக்கையை லோக் வெளிப்படுத் தினார். இந்த இருப்புப் பாதை தேசிய போக்குவரத்துக் கொள்கையின் ஷரத்தை நிறைவேற்றும் வகையில் செயல்படும். மேலும் தார்ச் சாலையை மட்டும் நாடு சார்ந்திருப்பதை இத்திட்டம் குறைக்கும். இது இயல்பாகவே கனரக வாகனங்கள் சாலையில் சென்று வரும் எண்ணிக்கையைக் குறைக்கும். அத்தோடு மேற்குத் துறைமுகத்தையும் கேரித் தீவு துறைமுகத்தையும் இது இணைக்கும்.
இத்திட்டம் கடந்த ஜூலை
2018இல் புதிய பேச்சு வார்த்தை களுக்கு இடமளிக்கும் வகையில் தற்
காலிகமாக நிறுத்தி வைக்கப்பட் டது. கடந்த 12 ஏப்ரல் 2019இல் மலேசியாவும் சீனாவும் ஒரு துணை
ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட பிறகு அது மீண்டும் முன்னெடுக் கப்பட்டது. ஆரம்பத்தில் 65.5 பில்லியன் ரிங்கிட் என்று மதிப்பிடப் பட்ட இத்திட்டம், புதிய பேச்சு வார்த்தைக்குப் பிறகு 21.5 பில்லியன் ரிங்கிட்டாக குறைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − 5 =