கோலாலம்பூர், டிச. 30-மலேசியா உட்பட உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா தாக்கத்தினால் இந்நாட்டில் உள்ள இந்திய உணவகங்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியிருப்பதாக பிரிமாஸ் தலைவர் கோவிந்தசாமி சுரேஸ் வேதனையோடு தெரிவித்தார்.
கோவிட்-19 தாக்கத்தால் உணவகத் தொழில் துறையினருக்கு, குறிப்பாக பிரிமாஸ் உறுப்பினர்களுக்கு இந்த ஆண்டு மிகவும் சவால்மிக்கதாக அமைந்துவிட்டது.
நடமாட்டக் கட்டுப்பாடு நடைமுறை இந்தத் தொழிலில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.
கொரோனா தாக்க மருட்டல் நாட்டில் இன்னமும் நீடிக்கின்ற சூழலில், அரசு நிர்ணயித்துள்ள நிலையான இயக்க நடைமுறை (ளுடீஞ)யையும் நாம் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது.
இதனால், நம் அங்கத்தினர்கள் தொழில் ரீதியாக அதிக நட்டத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
எது எவ்வாறாயினும் உணவக உரிமையாளர்கள் தற்பொழுது எதிர்கொண்டு வரும் தொழிலாளர் பற்றாக்குறை சிக்கல் உள்ளிட்ட அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு மீண்டு வருவதற்கான நடவடிக்கையில் பிரிமாஸ் நிர்வாகம் தொடர்ந்து முனைப்பு காட்டி வருகிறது என்றார் அவர்.
பிரிமாஸ் எனப்படும் மலேசிய இந்திய உணவக உரிமையாளர் கள் சங்கத்தின் 2020ஆம் ஆண்டுக்கான பொதுக்கூட்டத்தில் தலைமையுரையின்போது நடப்புத் தலைவர் கோவிந்தச்சாமி சுரேஸ் இவ்வாறு குறிப்பிட்டார்.