கொரோனா செயல் வீரர்களுக்கு லெவிஸ்டாவின் மதிப்பான வணக்கம்

0

சென்னை பெருநகர மாநகராட்சியுடன் இணைந்து லெவிஸ்டா காபி கொரோனா வீரர்களுக்கு நன்றி கலந்த வணக்கத்தை மதிப்போடு தெரிவிக்கிறது. தமிழகம் முழுவதிலுமான கொரோனா நோயாளிகள், துப்புரவுப் பணியாளர்கள், கடமையில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அனைவரும் இணைந்த இந்த கொரோனா வீரர்களை வருகின்ற 10 நாட்களில் உற்சாகமூட்டி ஊக்கமூட்டும் வகையில் செயல்படவுள்ளது லெவிஸ்டா. கோவிட் -19 பாதித்த நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு, அச்சங்களை துச்சமென நினைத்து உதவிக்கரம் நீட்டும் கொரோனா வீரர்களுக்கு 10 ஆயிரம் கப் காபி இந்த 10 நாட்களில் வழங்கப்படும். இந்த நன்முயற்சியில் களப்பணியாற்ற, லெவிஸ்டா தனது மீடியா பார்ட்னரான, தமிழகத்தின் நம்பர் 1 பண்பலை ஹலோ EM-உடன் கைகோர்த்துள்ளது.

“செயல் வீரர்களுக்கு நன்றி” என்ற தலைப்பில், லெவிஸ்டா சென்னை மாநகரம் முழுவதும் கொரோனா தொடர்பான களப்பணியில் முன்னணியில் நிற்கும் வீரர்களுக்கு பகலிலும் இரவிலும் (லாக்டவுன் மற்றும் ஊரடங்குத் தடைக்கிணங்க) நேரடியாக காபி வழங்கி ஊக்கப்படுத்தும். தினந்தோறும், ஒரு குறிப்பிட்ட பகுதியில் லெவிஸ்டா மொபைல் வேன் மூலம் நோயாளிகள் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறை மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு காபி விநியோகிக்கப்படும். லெவிஸ்டா காபித்தூள் வாங்க நினைப்பவர்களுக்கு இங்கே பேக்கேஜ் செய்யப்பட்ட லெவிஸ்டா காபி தள்ளுபடி விலையில் விற்கப்படும்.

இந்த நடவடிக்கை குறித்து லெவிஸ்டா காபி நிறுவனத்தின் துணைத் தலைவர் திரு. எஸ்.ஸ்ரீராம் பேசியபோது, “சமூகத்திற்கு எங்களால் ஆன இந்த சிறிய பங்களிப்பை நல்க கிடைத்த இந்த மகத்தான வாய்ப்வை நினைத்து பெருமை கொள்கிறோம். குறிப்பாக, கடந்த 150 நாட்களாக இந்த தொற்றுநோயை கட்டுப்படுத்தி எதிர்கொள்ளும் போராட்டத்தில் நல்ல முறையில் பணியாற்றி வரும் முன்னணி வீரர்களுக்காக முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கையில் பெருமிதம் கொள்கிறோம். மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு மற்றும் வழிகாட்டலோடு, சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் திரு. ஜி. பிரகாஷ் இந்த நோய்த்தொற்றை தீர்க்கமாய் கட்டுப்படுத்தும் பணியை சீராக மெற்கொண்டதோடு, பல்வேறு வழிமுறைகளை கையாண்டு பரவலையும் தொற்றையும் தடுத்தும் உள்ளார். இவ்வேளையில் சமூகத்திற்காக சேவை செய்யும் இந்த நல்வாய்ப்பை வழங்கிய தமிழக அரசுக்கு நாங்கள் நன்றி கூறிக்கொள்கிறோம்” என்று கூறினார்.

இந்த முன்னெடுப்பு பற்றி பேசிய, ஹலோ FM-இன் தலைமை செயல் அதிகாரி திரு. ராஜீவ் நம்பியார், “சென்னையிலும் தமிழகத்திலும் மக்கள் அதிகம் விரும்பிக் கேட்கும் நம்பர் 1 வானொலியாக இருப்பதன் மூலம், எமது விளம்பரதாரர்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் சமூகக் கடமை சார்ந்த நடவடிக்கைகளில், குறிப்பாக இந்த பெருந்தொற்று காலத்தில், முக்கிய பங்காற்றி வருகிறோம். அந்த வகையில் நம் தேசத்தின் பாதுகாப்பில் பங்காற்றும் செயல் வீரர்களுக்கான இந்த முன்னெடுப்பில் லெவிஸ்டா காபியுடன் இணைவதில் மகிழ்ச்சியடைகிறோம். ஹலோ FM-இல் உள்ள நாங்கள் அனைவரும், லெவிஸ்டா காபியின் இந்த முன்னெடுப்புக்கு அவர்களுடைய ஒலிபரப்பு மற்றும் நடைமுறையாக்க பங்களிப்பார்களாக, முழுமனதோடு எங்கள் ஆதரவையும், வாழ்த்தையும் தெரிவிக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.

ஜூலை 30ம் தேதியன்று, ரிப்பன் பில்டிங்கின் அம்மா மாளிகையில் வைத்து, சென்னை பெருநகர மாநகராட்சியின் துணை ஆணையர் திரு. குமரவேல் பாண்டியன் (பணிகள்), இணை ஆணையர் திரு. மதுசூதன ரெட்டி, துணை ஆணையர் திருமதி. ஜெயஷீலா ஆகியோர் கொடியசைத்து இந்த நடவடிக்கையை தொடக்கி வைத்தனர். ஹலோ FM-இன் RJ பாலாஜி தொகுத்து வழங்கிய இந்த நிகழ்வில், எஸ்.எல்.என் காபி நிறுவனத்தின் இயக்குனர் திருமதி. உமையாள் சாத்தப்பன், ஹலோ FM-இன் வர்த்தக மேம்பாட்டுப்பிரிவின் துணைத் தலைவர் காவ்யா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

லெவிஸ்டா

லெவிஸ்டா நிறுவனம் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான முன்னணி பிராண்ட்களுக்கு இணையாக இண்ஸ்டண்ட் மற்றும் பில்டர் காபி வகைகளில் தன்னை நிலைநிறுத்தி உள்ளது. இந்த நிதியாண்டில், இந்நிறுவனத்தின் வர்த்தகத்தில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் மேலாக உள்ள இரண்டு தென் மாநிலங்களான தமிழகம் மற்றும் கர்னாடகாவில் மேலும் தீர்க்கமாக களமிறங்க லெவிஸ்டா திட்டமிட்டுள்ளது.

“லெவிஸ்டா நிறுவனம் தமிழகம், கர்னாடகா மற்றும் புதுச்சேரியில், 600 விநியோகஸ்தர்கள் கொண்ட சீரான விநியோக அமைப்புறையின் மூலம், லாக்டவுனுக்கு பிறகு புதிதாக இணைந்த 6 ஆயிரம் ரீட்டெய்ல் ஸ்டோர்களையும் சேர்த்து மொத்தம் 34 ஆயிரத்துக்கு மேற்பட்ட கிரானா கடைகள் என்றும் மாம் & பாப் ஸ்டோர்ஸ் என்றும் பரவலாக அறியப்படும் மளிகைக் கடைகளை ஈர்த்துள்ளது. நவீன ரீட்டெய்ல் ஸ்டோர்கள் என்ற வகையில், இந்தியா முழுவதிலும் உள்ள ரிலையன்ஸ் ரீட்டெய்ல், மோர் சூப்பர்மார்க்கெட், SPAR, ஸ்பெர்ன்சர்ஸ், மெட்ரோ கேஷ் & கேரி மட்டுமல்லாது ஆன்லைன் வர்த்தகத்தில் ஆமசான், பிக் பாஸ்கெட், பிலிப்கார்ட், உடான், ஸ்விக்கி மற்றும் டன்ஸோ ஆகியவற்றிலும் இணைந்துள்ளது” என்று குறிப்பிட்ட திரு. ஸ்ரீராம், மேலும் 1500 விநியோகஸ்தர்களையும், 2022 நிதியாண்டிற்குள் வர்த்தகத்தில் 1 லட்சம் புள்ளிகள் என்ற இலக்கையும் அடைய லெவிஸ்டா முனைப்புடன் திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

லெவிஸ்டா

“நாடு தழுவிய அளவிலான லாக்டவுன் காரணமாக ஏப்ரல் திங்கள் முதல் பெரும்பாலான மக்கள் வீட்டில் இருந்தபடியே பணியாற்றும் காரணத்தால் காபி மற்றும் டீ விற்பனை அதிகரித்துள்ளது. தமிழகம் மற்றும் கர்னாடகாவில் பெரும்பாலானவர்களின் விருப்ப பானமாக காபி இருப்பதால், ரீட்டெய் ஸ்டோர்கள் அதிக நேரம் மூடியிருந்த போதிலும் காபி விற்பனையில் ஏற்றம் இருந்தது” என்ற திரு. ஸ்ரீராம் மாநில மற்றும் மத்திய அரசுகளின் இணைந்த முயற்சிகள் மற்றும் அயராத பணிகள் மூலமும், மக்களின் சமூக ஒழுங்கு மற்றும் சுய ஒழுக்கத்தின் மூலமும், விரைவில் இந்த கொரோனா தொற்று குறையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

எஸ். எல். என். காபி நிறுவனம் பற்றி:

60 ஆண்டுகளுக்கு மேலான காபி தோட்ட வரலாற்றை கொண்ட நிறுவனம் எஸ்.எல்.என். காபி. இந்தியாவின் முன்னணி 10 காபி ஏற்றுமதியாளர்களில் ஒன்றாக இருப்பதோடு, எச்.டி.எல், ஐ.டி.சி, கொக்க கோலா உள்ளிட்ட பல உலகு தழுவிய நிறுவனங்களுக்கு ரெடிமேட் காபியை கடந்த 20 ஆண்டுகளாக வழங்கி வருகிறது. கர்னாடக மாநிலத்தின், குடகு பகுதியில் குஷால் நகரில் தலைமையகத்தை கொண்ட இந்த நிறுவனம், அதிநவீனமும் தன்னிகரற்ற தன்மையும் கொண்ட, 800 பேர் நேரடியாகவும் பின்னணியிலும் பணியாற்றும் சிறப்பான ஆலையை கொண்டுள்ளது. லெவிஸ்டா என்ற தனது சொந்த லேபிள் மூலம் களத்தில் இறங்கி, காபி பயிர் செய்கை மற்றும் பதப்படுத்தலில் கொண்ட அனுபவத்தின் துணையோடு 2017-இல் லெவிஸ்டா இன்ஸ்டண்ட் காபி மற்றும் 2018-இல் லெவிஸ்டா பில்டர் காபியை அறிமுகப்படுத்தியது.

தனியார் நிறுவனமான எஸ். எல். என். காபியை, தமிழகத்தின் காரைக்குடியைச் சேர்ந்த சகோதரர்கள் திரு. என். சாத்தப்பன் மற்றும் திரு. என். விஸ்வநாதன் திறம்பட நிர்வகித்து வருகின்றனர். இவர்களது பொதுநல நோக்குடன் கூடிய ஈகைச் செயல்கள் குடகுப் பகுதி முழுவதிலும் இவர்களுக்கு நற்பெயரையும், நன்மதிப்பையும் பெற்றுத்தந்துள்ளது. ரியல் எஸ்டேட், கல்வி உள்ளிட்டவற்றில் இதர வர்த்தக மற்றும் வணிக நோக்கிலான ஆர்வம் தாண்டி, குடகுப் பகுதியின் குஷால் நகரில் “பர்பிள் ரிசார்ட்” என்ற ஆடம்பர ரிசார்ட்டையும் இந்நிறுவனம் நடத்தி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven − four =