கொரோனாவுடன் போராடும் இந்தியா… உதவிப் பொருட்களை அனுப்பியது அமெரிக்கா

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் நிலையில், பல்வேறு நாடுகள் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டி உள்ளன. ஆக்சிஜன், மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை அனுப்பியவண்ணம் உள்ளன.

அவ்வகையில், இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்காவும் இந்தியாவுக்கு தேவையான உதவிகளை செய்வதாக கூறியிருந்தது.

அதன்படி, கொரோனாவை கட்டுப்படுத்த உதவும் மருந்துகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜன் உற்பத்தி சாதனங்கள், தடுப்பூசி உற்பத்தி பொருட்கள், பரிசோதனை கருவிகளை அமெரிக்க அரசு விமானப்படை விமானத்தில் அனுப்பி வைத்தது. அந்த விமானம் இன்று டெல்லி வந்து சேர்ந்தது. இதேபோல் அடுத்த வாரம் மேலும் பல விமானங்கள் மூலம் உதவிப்பொருட்களை அமெரிக்கா அனுப்ப உள்ளது.

இதற்கிடையே, ஐரோப்பிய ஒன்றிய நட்பு நாடான ருமேனியாவும் இந்தியாவுக்கு உதவி பொருட்களை அனுப்பி உள்ளது. 80 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 70 ஆக்சிஜன் சிலிண்டர்கள் இந்தியா வந்து சேர்ந்தன. உதவி செய்த ருமேனியா அரசுக்கு மத்திய அரசு நன்றி தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen + 12 =