கைவிடப்பட்ட வாகனங்கள் பறிமுதல் !

0

இங்குள்ள செக்ஷன் 42 இல் கைவிடப்பட்ட 60 வாகனங்களை ஷா ஆலம் மாநகர் மன்ற அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர். ஒரு மாதத்திற்கு முன்னர் பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற புகாரைத்தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மாநகர் மன்றத்தின் பொதுஉறவு பிரிவு தலைவர் ஷாஹ்ரின் அஹ்மாட் தெரிவித்தார்.
பொது கார்நிறுத்துமிடத்தில் இருந்து இந்த வாகனங்களை அப்புறப்படுத்துமாறு அதன் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது,
வாகனங்களை அப்புறப்படுத்த பட்டறைகளுக்கும் தொழிற்சாலை உரிமையாளர்களுக்கும் 140 நோட்டீஸ்களை ஷா ஆலம் மாநகர் மன்றம் வழங்கியிருந்தது. வாகன உரிமையாளர்கள் இந்த நோட்டீஸை பின்பற்றி வாகனங்களை அப்புறப்படுத்தினர்.
ஒவ்வொரு வாகனத்தையும் கிடங்கிற்குக் கொண்டு செல்ல தலா 130 வெள்ளி செலவானது. இந்த கைவிடப்பட்ட வாகனங்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டது பார்ப்பதற்கு அசிங்கமாக இருந்ததுடன் துப்புரவு பணிகளை மேற்கொள்வதற்கும் சிரமத்தையும் ஏற்படுத்தியது.
இந்த கைவிடப்பட்ட வாகனங்களில் ஏடிஸ் கொசு இனவிருத்தி செய்வதற்கான வாய்ப்பும் உள்ளது என்று ஷாஹ்ரின் அஹ்மாட் கூறினார்.
பறிமுதல் செய்யப்படும் கைவிடப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பறிமுதல் செய்யப்படும் வாகனங்களில் 20 சதவீதத்தை மட்டுமே அதன் உரிமையாளர்கள் கோருவதற்கு முன்வருகின்றனர். ஒவ்வொரு வாகனத்தின் மீதும் 600 வெள்ளி அபராதம் விதிக்கப்படுகிறது.

பிறை ஆற்றில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × three =