கையூட்டு வழங்க முயன்ற ஆடவர் கைது

0

இங்குள்ள ஜாலான் டாயேங் செலிலியில் போக்குவரத்து காவல்துறையினருக்கு கையூட்டு வழங்க முயன்ற ஒரு மியன்மார் ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோலகங்சார் வட்டார காவல்துறை தலைமையகத்தின் போக்குவரத்துப் பிரிவினர் நேற்று காலை 11.50 மணிக்கு மேற்கொண்ட ஓப் போக்குவரத்து அமலாக்கத்தின் போது இந்த ஆடவர் கைது செய்யப்பட்டார். யமஹா எல்சி மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்தவரைச் சோதனையிட்டதில், அவரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. காவல்துறையினர் சம்மன் வழங்குவதைத் தவிர்க்க சந்தேக நபர் 50 வெள்ளி கையூட்டு வழங்க முன்வந்தார்.
காவல்துறையினர் லஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்திய சந்தேக நபருக்கு பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனினும் சந்தேகநபர் வற்புறுத்தலை கைவிடாததால் அவர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரை பேரா ஊழல் தடுப்பு ஆணையத்திடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × three =