கைது செய்யப்பட்ட கம்போடிய எதிர்க்கட்சித் தலைவர்கள் இருவரும் மற்றொரு நாட்டில் மறுகுடியேற்றம் செய்யப்படுவர்

0

மலேசிய குடிநுழைவு இலாகா அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட கம்போடிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 2 பேரும் மற்றொரு நாட்டில் மறு குடியேற்றம் செய்யப்படுவர் என மலேசிய மனித உரிமை ஆணையத்தின் (சுஹாகாம்) ஆணையர் ஜெரால்ட் ஜோசப் கூறினார். இவர்கள் தற்போது கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் தடுப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


இவர்கள் மற்றொரு நாட்டில் மறு குடியேற்றம் செய்யப்பட அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் தூதரின் பரிசீலனைக்காகக் காத்திருப்பதாக அவர் சொன்னார். கடந்த திங்கள்கிழமை இரவு கம்போடியாவில் தடை செய்யப்பட்ட தேசிய மீட்புக் கட்சியின் உதவித் தலைவர் மூ சொஷுவா உட்பட இருவரை குடிநுழைவு இலாகா கைது செய்தது. இவர்கள் இருவரையும் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சுஹாகாமின் புகார் பிரிவினர் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் தடுப்பு நிலையத்தில் சென்று கண்டதாக அவர் கூறினார்.


கடந்த அக்டோபர் மாதம் தாய்லாந்திற்குள் நுழையவிருந்த மூ சொஷுவா தடுத்து நிறுத்தப்பட்டார். கம்போடிய அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சதித்திட்டத்தைத் தொடர்ந்து இவ்வாண்டு 48 எதிர்க்கட்சி ஆர்வலர்களை கம்போடிய அரசாங்கம் கைது செய்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here