கைதாவதை தவிர்க்க கடலில் குதித்த நபர்

0

நடமாட்டக் கட்டுப்பாட்டை மீறிய நபர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் கடலில் குதித்து, 50 மீட்டர் தூரம் வரை நீந்திச் சென்றுள்ளார்.
இந்தச் சம்பவம் பினாங்கு ஜெலுத்தோங் ஜெட்டிக்கு அருகில் நேற்று முன்தினம் மாலை 5.40 மணியளவில் நடந்துள்ளது.
கரைக்கு வர மறுத்து அவர் கடலில் மேலும் நீந்திச் செல்வார் எனும் அச்சத்த்தின் காரணமாகப் போலீசார் அவரை அங்கேயே விட்டுச் சென்றனர்.எனினும், அவரோடு அத்தப் பகுதியில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த 21லிருந்து 70 வயதுடைய அவரின் நண்பர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே, தாமான் மங்கீஸ் மக்கள் வீடமைப்புப் பகுதியின் கார் நிறுத்துமிடத்தில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த மூவர் கைது செய்யப்பட்டிருப்பாக வடகிழக்கு மாவட்ட போலீஸ் தலைவர் சோஃபியான் சன்தோங் தெரிவித்தார்.
அதனையடுத்து, தஞ்சோங் தோக்கோங்கில் பறவைகளை வேட்டையாடிய 20 வயதிலிருந்து 40 வயது மதிக்கத்தக்க நால்வர் கைது செய்யப்பட்ட வேளையில், மத்திய செபெராங் பிறையில் நடமாட்டக் கட்டுப்பாட்டை மீறிய 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six + 11 =