கே.கே. சூப்பர் மார்ட் தனது 450ஆவது கடையைத் திறந்தது

கே.கே. சூப்பர் மார்ட் தனது 450 ஆவது கடையை போர்ட்டிக்சன் நகரில் பெருமையுடன் திறந்தது. இந்த புதிய கடை திறப்பு விழாவானது கே.கே. சூப்பர் மார்ட் நாடு முழுவதும் அதன் விற்பனை நிலையங்களை விரிவுபடுத்துவதில் உறுதியாக உள்ளது என்பது நிரூபித்துள்ளது.
போர்ட்டிக்சன் பத்து 4 இல் அமைந்துள்ள கே.கே. சூப்பர் மார்ட் கடை போர்ட் டிக்சனின் மூன்றாவது கடையாகும். மற்ற கே.கே. சூப்பர் மார்ட் விற்பனை நிலையங்கள் முறையே 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பந்தாய் பத்து 7 மற்றும் லுக்குட் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டன. மூன்றாவது புதிய கடையை போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அன்வார் பின் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.
முன்னர் தெலுக் கெமாங் என்று அழைக்கப்பட்ட போர்ட்டிக்சன் சுற்றுலாவுக்கு ஓர் அற்புதமான மற்றும் பிரபலமான இடமாகும். ஏனெனில் இது பசுமை, வரலாறு மற்றும் கலாசாரத்தால் நிரம்பியுள்ளது. மேலும், டத்தோஸ்ரீ டாக்டர் கே.கே.சாய் இந்த சுற்றுலா இடமான போர்ட்டிக்சனில் வணிக வளர்ச்சியைக் கண்டறிந்துள்ளார். தினமும் 24 மணிநேரமும் இயங்கும் கே.கே. சூப்பர் மார்ட் விற்பனை நிலையங்கள் சுற்றுப்பயணிகளின் தேவைகளை எந்நேரமும் பூர்த்தி செய்யும் என்றார் டத்தோ கே.கே.சாய்.
கே.கே. சூப்பர் மார்ட் என்பது மலேசியாவில் நன்கு அறியப்பட்ட மற்றும் வேகமாக வளர்ந்து வரும் கடை ஆகும். இது 24 மணிநேரமும், வாரத்தில் 7 நாட்களும், 365 நாட்களும் இயங்குகிறது. கூச்சிங்கில் பிறந்த டத்தோஸ்ரீ டாக்டர் கே.கே.சாய், கோலாலம்பூரில் உள்ள கூச்சாய் லாமாவில் முதல் கே.கே. சூப்பர் மார்ட் கடையை 2001 இல் நிறுவினார்.
2020 ஆம் ஆண்டில் 500 விற்பனை நிலையங்களைத் திறக்கும் இலக்கை அடைய ஒரு நம்பிக்கையான இலக்குடன் கே.கே. சாய் எந்நேரமும் உழைத்து வருகின்றார் என்பதற்கு போர்ட்டிக்சனில் அமைத்துள்ள இப்புதிய 450ஆவது கடை சான்றாகும்.
மார்ச் மாதத்தில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது (எம்.சி.ஓ), கே.கே. சூப்பர் மார்ட் இந்த காலகட்டத்தில் சில சிரமங்களையும் சவால்களையும் எதிர்கொண்டது. “எம்.சி.ஓ காலகட்டத்தில் எங்களால் செயல்பட முடிந்தது என்றாலும், பொருட்களின் பற்றாக்குறை, சில கடைகள் இயக்கங்களுக்கு தடை மற்றும் ஊழியர்கள் கோவிட் -19 அபாயத்திற்கு ஆளாகியிருப்பது போன்ற பிரச்சினைகளை நாங்கள் எதிர்கொண்டோம். ஆனால், நாங்கள் ஒருபோதும் இதற்கு அசரவில்லை. இந்த காலகட்டத்தில் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நாங்கள் சில கடைகளைத் திறந்தோம்“ என்கிறார் டத்தோஸ்ரீ டாக்டர் கே.கே.சாய்.
நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை காலம் முழுவதும் கே.கே. சூப்பர் மார்ட் மலேசியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் ஆதரவையும் உதவிகளையும் வழங்கியுள்ளது. “இந்தியாவில் வீடற்ற தனிநபர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் நாங்கள் பொட்டல உணவுகளைத் தயாரித்துள்ளோம். அதே நேரத்தில் நேபாளத்தில், மலேசிய தூதரகம் என்னைத் தொடர்புகொண்டு தற்போது நேபாளத்தில் வசிக்கும் மலேசியர்களின் நிலையை மேம்படுத்த கே.கே. சூப்பர் மார்ட் பொட்டல உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கியது” என்றார் டத்தோஸ்ரீ டாக்டர் கே.கே.சாய் .
வேலையின்மை பற்றி குறிப்பிடுகையில், தேசிய பொருளாதார மீட்பு திட்டத்தின் (பெஞ்சனா) கீழ் பங்கேற்க
கே.கே. சூப்பர் மார்ட் அழைக் கப்பட்டதில் மகிழ்ச்சி அடைவதாக கே.கே. சாய் கூறினார். புதிய பட்டதாரிகள் மற்றும் பள்ளியை விட்டு வெளி யேறியவர்கள் உட்பட வேலையற் றோர் மற்றும் வேலை தேடுபவர்களுக்கு 1,000 வேலைகளை வழங்குவதன் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும் வேலைவாய்ப்பு விகிதங்களை அதிகரிப்பதற்கும் கே.கே. சூப்பர் மார்ட் முழுமுயற்சி எடுத்து வருகின்றது. நேர்காணல் அமர்வு அடுத்த வாரம் கே.கே ஹோட்டல் காஜாங் சிலாங்கூரில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen + 7 =