கேகேபி ஜாலான் பக்தி மேரு வட்டாரத்தில் தீபாவளி விருந்து நிகழ்ச்சி

0

தொழிலாளர் கூட்டுறவு நாணயச்சங்க ஜாலான் பக்தி வட்டார பெறுப்பாளர்கள் சுங்கை காப்பார் இண்டா யோகா பயிற்சி மண்டபத்தில் தீபாவளி ஒன்றுகூடும் நிகழ்ச்சியை பரத நாட்டியத்துடன் சிறப்பாகக் கொண்டாடி னர். வட்டார அன்பர்கள் விதவிதமான உணவு வகைகளுடன் தீபாவளி பலகாரங்களுடனும் வந்தது மிகச்சிறப்பு. பாரம்பரிய உடைகளுடன் பொறுப்பாளர் மகாலிங்கம் சிறப்புரையாற்றினார் வாரிய பிரதிநிதியான வாரிய இயக்குனர் திருமதி பத்மா. தீபாவளி சிறப்பைப் பற்றி பேசியதோடு, அமைப்பின் வளர்ச்சி, இது போன்ற பண்டிகைத்திருநாள் விருந்து நிகழ்வுகள், ஆண் – பெண் சமத்துவம் போன்ற கருத்துகளை முன்வைத்தார். அறிவிப்புப் பணியினை திறம்பட நடத்தி விருந்து நிகழ்வை குதூகலப்படுத்தினார் சந்திரசேகர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 2 =