கெப்போங்கில் மீன் பிடிக்கும் போட்டி வெற்றியாளர்களுக்கு 30,000 வெள்ளி

0

டிபிகேஎல் எனப்படும் கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் ஏற்பாட்டில் மீன் பிடிக்கும் கடைசி போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை கெப்போங் மெட்ரோபொலிட்டனில் முடிவடைகிறது.
இவ்வாண்டு 10 இடங்களில் மீன் பிடிக்கும் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கடைசி போட்டியாக கெப்போங் விளங்குகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு தொடங்கும் இப்போட்டியில் ஆயிரம் பேர் பங்கேற்கவுள்ளனர்.
அதிக இடையுள்ள மீனைப் பிடித்து முதல் இடத்தைப் பிடிப்பவருக்கு 12,000 வெள்ளி காத்துக் கொண்டிருக்கிறது. 2வது இடத்திற்கு 3,000 வெள்ளி, 3வது இடத்திற்கு 1,000 வெள்ளியும் வழங்கப்படவுள்ளன. 4 முதல் 10 இடங்களைப் பிடிப்பவர்களுக்கு தலா 200 வெள்ளியும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine − 3 =