கெத்தும் நீரை அருந்த இருந்த 11 பேர் கைது


கெத்தும் நீரை அருந்துவதற்காக பட்டவொர்த்தில் உள்ள ஸ்ரீபாகான் டாலாம் குடியிருப்பு கூடியிருந்த 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் என்று வட செபெராங் பிறை மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் நூர்ஸாயினி முகம்மது நூர் கூறினார்.
இவ்வட்டாரத்தில் எஸ்ஓபி எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட பணி நெறிமுறைகள் அமலாக்கத்தை கண்காணிக்க சென்ற போலீசார் இவர்களை கைது சென்றனர் என்றார் நூர்ஸாயினி.கைதானவர்களில் பெரும்பான்மையினர் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை.எஸ்ஓபி எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட பணி நெறிமுறையை பின்பற்றாதவர்களுக்கு தலா 1,500 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது. இதற்கிடையில் எஸ்ஓபியை பின்பற்றாமல் இங்குள்ள பந்தாய் பெர்சிஹ்விற்கு பிக்னிக் வந்த கலந்து 14 பேருக்கு அபராத நோட்டீஸ் வழங்கப்பட்டது என்றார் நூர்ஸாயினி.
ஒரே வாகனத்தில் பயணம் செய்த மூன்றுக்கும் மேற்பட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார் நூர்ஸாயினி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 + 18 =