கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் கடுகு துவையல்

கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலும், உடல் பருமனை குறைக்கும் ஆற்றலும் கடுகிற்கு உண்டு. ஜீரண கோளாறுகளை சரிசெய்ய கூடியதும், ரத்தத்தை சுத்தப்படுத்த கூடியதுமானது கடுகு.

கடுகு – 2 டேபிள்ஸ்பூன்,
புளி – கோலிகுண்டு அளவு,
உளுந்து – 1/2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2,
பெருங்காயத்தூள் – சிறிது
தேங்காய் துண்டு – 2,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

  • ஒரு வாணலியில் வெறும் கடுகு போட்டு பொரித்து எடுக்கவும்.
  • பிறகு எண்ணெய் விட்டு உளுந்து, காய்ந்த மிளகாய், தேங்காய், புளி போட்டு சிவக்க வறுக்கவும். அதில் பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
  • அனைத்தும் நன்றாக ஆறியதும் மிக்சியில் உப்பு, சிறிது தண்ணீர் தெளித்து அரைக்கவும்.
  • சுவையான கடுகு துவையல் ரெடி.
  • இது சற்று துவர்ப்புடன் இருக்கும். தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதத்துக்கு தொட்டுச் சாப்பிட ருசியாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 5 =