கெடா மாநில மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் திட்டங்களை அரசாங்கம் மேற்கொள்ள இருக்கின்றது

0

கெடா மாநில அரசாங்கம் மக்களின் வளர்ச்சித் திட்டத்தை உருவாக்க இருப்பதாக குரூண் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் டத்தோ ஜொகாரி அப்துல் கூறினார். அண்மைய காலமாக மாநில அரசாங்கம் மக்களின் பொருளாதாரத்தை பெருக்க சில திட்டங்களை அடையாளம் கண்டு அதனை அறிமுகப்படுத்த இருப்பதாக அவர் சொன்னார்.
குறிப்பாக பீடோங், குரூண் வட்டாரங்களில் சுற்றுலாத் தலங்களை உருவாக்க பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தவிருப்பதாக ஜெராய் நாடாளுமன்றத் தொகுதியின் தீபாவளி பொது உபசரிப்பை தொடக்கி வைத்துப் பேசிய போது அவர் இதனை தெரிவித்தார்.
ஜெராய் மற்றும் குரூண் பகுதிகளில் அரசாங்கம் பொருளாதாரத் திட்டங்களை தொடங்க ஆய்வு மேற்கொண்டுவருவதாக அவர் கூறினார். பி.கே.ஆர். ஜெராய் தொகுதித் தலைவர் எஸ்.பூபாலன் தலைமையில் இந்த தீபாவளி பொது உபசரிப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − fifteen =