கெடா அரசு இந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறது கொந்தளிப்பு!

    கெடாவில் கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த தைப்பூசத் திருநாளுக்கான விடுமுறையை தன்மூப்பாக ரத்து செய்துள்ள கெடா மாநில பாஸ் அரசாங்கம் மலேசிய இந்து மக்களின் உணர்வுகளை தொடர்ந்து புண்படுத்தி வருகிறது என்று நாடு தழுவிய அளவில் பெருத்த கண்டனம் வெடித்துள்ளது. நாட்டில் முழுமையாக அவசர காலநிலையும் நடமாட்டக் கட்டுப்பாட்டுத்தடையும் விதிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் அனைத்து நடவடிக்கைகளும் ஏறக்குறைய ஸ்தம்பித்துள்ளன. இந்நிலையில் தைப்பூசத் திருநாள் அன்று விடுமுறையை ரத்து செய்வதன் வழி மாநில அரசாங்கம் எதையும் சாதிக்கப்போவதில்லை. இருப்பினும் மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் பாஸ் கட்சியின் மாநில அரசாங்கம் இந்து மக்களுக்கு எதிரான அரசாங்கமாக இருக்கிறது என்று பொதுமக்கள் கருத்துரைத்து வருகின்றனர்.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    5 × 3 =