கெடாவில் போதுமான உணவுப் பொருட்கள் உள்ளன

கோவிட்-19 புதிய நோய்த் தொற்று தாக்கத் தினால் மெலோர் என்ற இடத்தில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
இங்கு மக்கள் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவும் அமல்படுத்தப்பட்டிருப்பதால், பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து வகைப் பொருட்களும் அதிகளவில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோழி, இறைச்சி, காய்கறிகள், பழவகைகள் உட்பட அத்தியாவசியப் பொருட்களும் போதுமான அளவில் இருப்பதாக உள்நாட்டு பயனீட்டாளர் விவகார அமைச்சின் கெடா மாநில இலாகா அமலாக்கப் பிரிவு அறிவித்துள்ளது.
அனைத்து வகைப் பொருட்களும் நியாயமான விலையில் விற்கப்படுகின்றன.
கோபிஸ் கிலோ 4 வெள்ளி, தக்காளி 5 வெள்ளி, கோழி இறைச்சி கிலோ வெ.8.50க்கு விற்கப்படும் வேளையில், 10 வெள்ளி முதல் 38 வெள்ளி வரை பலவகையான மீன்களும் சந்தைகளில் கிடைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 2 =