கூலாயில் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட வேண்டும்

0

கூலாயில் உள்ள 422 வறுமையான குடும்பங்களுக்கு உணவு விநியோகம் கிடைப்பதை போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் உறுதி செய்ய வேண்டும் என ஜசெக கூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நீ சிங் கூறினார்.
இந்த வசதிகுறைந்த குடும்பங்களுக்கு உதவுவதாக அரசாங்கம் ஏற்கெனவே உறுதியளித்திருந்தது.
ஆனால் தற்போது அந்தக் குடும்பங்களுக்கு உணவு விநியோகம் கிடைக்கவில்லை. வறுமையில் வாடும் அந்தக் குடும்பங்களுக்கு உணவை விநியோகம் செய்யும்படி கூலாயில் உள்ள சமூகநல இலாகாக்களுக்கு கடிதம் எழுதும்படி மசீச தலைவருமான வீ கா சியோங்கிற்கு அவர் சவால் விடுத்தார். எதிர்க்கட்சிகளின் தொகுதிகளுக்கு கோவிட்-19 உதவி நிதி வழங்குவதை மத்திய அரசாங்கம் தடுத்துள்ளதால் தமது தொகுதி மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்குவதில் தாம் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்தக் குடும்பங்களுக்கு உடனடியாக உணவுப் பொருட்களை வழங்க தமது சகாவான மகளிர், குடும்ப, சமூலநல மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரீனா ஹருணை வீ கேட்டுக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
கூலாய் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள வசதிகுறைந்த குடும்பங்களின் பெயர்ப் பட்டியலை இங்குள்ள சமூகநல இலாகாவிடம் தாம் ஏற்கெனவே ஒப்படைத்து விட்டதாக முன்னாள் துணை அமைச்சருமான அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − thirteen =