கூரை மீது “Paragliders”ன் அவசர தரையிறக்கம் – அதிர்ந்த குடும்ப மாது

தனது வீட்டின் கூரை மீது  “Paragliders” அதாவது பறவை போல பறந்துச் செல்லும் விளையாட்டு வீரர்கள் இருவர் அவசர தரையிறக்கம் செய்தது குடும்ப மாதுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் நேற்று மதியம் 3 மணியளவில் கோத்தா கினாபாலு, டெலிபோக், கம்போங் தாலுங்கான் பகுதியில் நிகழ்ந்தது.
தங்கள் கூரை மீது ஏதோ ஒன்று பயங்கர சத்தத்துடன் விழுந்ததைத் அதிர்ச்சியடைந்த 27 வயது எல்பிரா, முதலில், அருகாமையில் உள்ள பள்ளிக்கூடத்தின் மாணவர்கள் பந்தை எரிந்தார்கள் என நினைத்தேன். பின்னர் அண்டை வீட்டுக்காரர் யாரோ இருவர் உன் கூரை மீது நடந்து வருகிறார்கள் என்று கூறியவுடன் எட்டிப் பார்த்த போதுதான் தெரிந்துள்ளது அது அவசர தரையிறக்கம் என்று கூறினார்.

மெங்காதால் மலையிலிருந்து பறந்த வழிகாட்டி மற்றும் சீன நாட்டு பிரஜை இருவரும், காற்றின் திசை மாற்றத்தினால் அவசர தரையிறக்கம் செய்துள்ளனர். ஆனால் அவர்கள் வீட்டின் கூரை மீது இறங்க வேண்டியதாயிற்று.
வீட்டின் கூரைக்கு ஏற்பட்ட சேதத்தை அவர்கள் இருவரும் ஈடு கட்டுவதாகவும் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 2 =