கூட்டரசுப் பிரதேச தினத்தை முன்னிட்டு 335 பிரமுகர்களுக்கு உயரிய விருது!

பிப்.2-நேற்று கூட்டரசுப் பிரதேச துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சந்தாரா குமார் டத்தோஸ்ரீ விருது பெற்றார். ஜொகூர் மாநிலத்தைச் சேர்ந்த மலேசிய மருத்துவச் சங்கத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் என். ஞானபாஸ்கரன் டத்தோ விருது பெற்றார். அதனைப் போல் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயப் பொருளாளர் அழகன் டத்தோ விருது பெற்றார். மொத்தம் 335 பிரமுகர்களில் கூட்டரசுப் பிரதேசத்தின் உயரிய விருதான டத்தோஸ்ரீ உத்தாமா விருதை பினாங்கு மாநில ஆளுநர் துன் டாக்டர் அப்துல் ரஹ்மான் அபாஸ், மலாக்கா மாநில ஆளுநர் துன் அலரோஸ் டாம், சபா மாநில ஆளுநர் துன் முகமட் அலி ருஸ்தாம் ஆகியோ ருக்கும் வழங்கப்பட்டன. இவர்களுடன் சரவாக் ஆளுநர் துன் தாய்ப் மாமுட்டின் துணைவியார் தோபுவான் டத்தோ பாத்திங்கி ரஹாட் குர்டி தாய்ப் பிற்கு அதே விருது வழங்கப்பட் டது. தற்போது நாட்டில் கோவிட் – 19 பாதிப்பின் காரணமாக பொது நிகழ்ச்சிகள் தடைசெய்யப்பட் டுள்ளதால் பேரரசரால் வழங் கப்பட இருந்த விருது வழங்கும் வைபவம் நடைபெறவில்லை. அதன் தேதி பின்னர் அறிவிக் கப்படும் என கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டான்ஸ்ரீ அனுவார் மூசா அறிவித்தார். நேற்று காலை அவர் விருது பெற்றவர்களின் விவரங்களை அறிவித்தார். விருது வழங்கும் வைபவம் நடைபெறாததால் விருது பெற்றவர்கள் தங்களின் பெயருக்கு முன் உயரிய விருதுகளைப் பயன் படுத்தலாம் என அவர் கூறினார். விருது பெற்றவர்கள் பட்டியலில் கோலாலம்பூர் இருதய சிகிச்சை நிலையத்தின் டாக்டர் பாலச்சந்திரன் கந்தசாமி டத்தோஸ்ரீ விருது பெற்றுள்ளார். சுகாதார அமைச்சின் டாக்டர் முருகேசு ராஜு மஇகாவைச் சேர்ந்த மோகன் பிள்ளை சுகுமாரன், ஐபிஎப் கட்சியைச் சேர்ந்த வேலாயுதம் குப்பன் ஆகியோர் டத்தோ விருது பெற்றனர். கோலாலம்பூர் சுங்கத்துறை இலாகாவைச் சேர்ந்த குணசேகரன் குப்பன் மற்றும் மஇகாவைச் சேர்ந்த நடராஜன் கந்தசாமி ஆகியோருக்கு ஜே.எம்.டபள்யூ விருது பெற்றனர். மேலும் காவல் துறையைச் சேர்ந்த ஏசிபி முகமட் ஃபாமி விஸ்வநாதன், சுப்ரிண்டென்டன்ட் பாலசுப்பிரமணியம், சூப்ரிண் டென்டன்ட் தாமரை லெட்சுமி ஆகியோர் கேஎம்டபள்யூ விருதினை பெற்றனர். டத்தோ டாக்டர் ஞானபாஸ்கரன் மிக நீண்ட காலத்திற்குப் பின் டாக்டர் ஞானபாஸ்கரன் டத்தோ விருதை பெற்றுள்ளார். ஜொகூர் மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் என்.ஞானபாஸ்கரன் மிக நீண்ட காலமாக பொதுச்சேவையில் இருந்துள்ளார். 1984இல் மஇகா மத்திய செயற்குழுவிற்கு போட்டி யிட்டு முதல் நிலையில் வெற்றி பெற்றார். மஇகாவில் அவர் ஆற்றிய சேவையை யாரும் அவ்வ ளவு எளிதில் மறந்துவிட முடியாது. மஇகாவிலிருந்து 1989இல் வெளி யேறிய பின் ஐபிஎப் கட்சியின் துணைத் தலைவராகவும் அவர் பொறுப்பேற்றிருந்தார். சென்னை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற இவர், அங்கேயே வெளிநாட்டு மாணவர் களின் சங்கத்தின் தலைவராகவும் இருந்து சேவையாற்றினார். ஜொகூர் பாரு இந்தியர் சங்கத் தலைவராகவும், ஜொகூர் பாரு. அருள்மிகு தண்டாயுதபாணி ஆலயத் தலைவராகவும் மிக நீண்ட காலமாக பொறுப்பேற்றிருந் தார். மலேசிய சிலம்பக் கழகத்தில் 9 ஆண்டுகளாக தலைவராக மாஜு ஜெயா இளைஞர் கூட்டுறவு சங்கத்தின் துணைத் தலைவராக வும் பொறுப்பேற்று செயல்பட்டார். சமீபத்தில் அவர் மலேசிய மருத்துவச் சங்கத்தின் தலைவ ராக ஓர் ஆண்டு சேவையாற்றியுள் ளார். அரசாங்கத்தின் தென்னிந்திய தொழிலாளர் நிதியின் வாரிய உறுப்பினராகவும் இருந்த இவர், மஇகா ஏற்பாடு செய்த நிதி திரட்டும் நிகழ்ச்சிகளுக்கு கணிசமான தொகையை வசூல் செய்து சாதனை படைத்துள்ளார். வழக்கறிஞர் ரேணுகா தேவியை திருமணம் புரிந்த அவருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். டத்தோ அழகன் பெரியசாமி கோலாலம்பூர் ஸ்ரீமகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் பொருளாளர் பெ.அழகன் டத்தோ விருது பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கோலாலம்பூர் ஸ்ரீமகா மாரியம்மன் கோயில் தேவஸ் தானத்தின் அறங்காவலருமான இவர், தாமான் சிகாம்புட் ம.இ.கா. கிளைத் தலைவராகவும் இருந்து வருகிறார். தேவஸ்தானத்தின் நகர் வாழ் மக்கள் உபய நாட்டாமை (முன்பு டெலிகாம்ஸ் ஸ்ரீவிநாயகர் சதுர்த்தி உபய நாட்டாமை) பொறுப்பில் இருக்கும் இவர் பல ஆண்டு களாக தேவஸ்தானத்தின் பொருளாளராகச் சேவையாற்றி யுள்ளார். இவரின் சேவைக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் டத்தோ விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் கூட்டரசு பிரதேச தலைமைச் செயலாளர் டத்தோ கோலாலம்பூர் டத்தோ பண்டார், டத்தோ ஹஜி மஹாடி, சே ஙா அவர்களும், கூட்டரசுப் பிரதேச அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ ரோசிடா ஜபார் ஆகியோருக்கு டத்தோஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − 19 =