கூட்டரசுப் பிரதேச அமைச்சு 6 கோடியே 30 லட்சம் மானியம் வழங்கும்

0

கூட்டரசுப் பிரதேச மக்கள் நலன் காக்கும் திட்டத்திற்காக 6 கோடியே 30 லட்சம் வெள்ளி மானியம் வெளியிடப்படும் என்று கூட்டரசுப் பிரதேச அமைச்சர் அனுவார் மூசா அறிவித்தார்.
கூட்டரசுப் பிரதேச அமைச்சின் இம்முடிவிற்கு இம்மாநில இஸ்லாமிய மன்றமும் கூட்டரசுப் பிரதேச அறவாரியமும் முழு ஆதரவு தெரிவித்திருப்பதாக அவர் அறிவித்தார் இந்த 6 கோடியே 30 லட்சம் வெள்ளி 3 பிரிவுகளாக உதவி தேவைப்படும் தரப்பினருக்கு கொண்டு போய்ச் சேர்க்கப்படும். கூட்டரசுப் பிரதேசத்தில் பணியாற்றும் 5,000க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு 50 லட்சம் வெள்ளி பிரிக்கப் பட்டுள்ளது.
இதைத் தவிர்த்து கோவிட்-19 பாதிப்பை எதிர்நோக்கியிருக்கும் நோயாளிகளுக்கும் மருத்துவச் சோதனையில் இருப்பவர்களுக்கும் சுமார் 30 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மூன்றாவது கட்டமாக கூட்டரசுப் பிரதேச குடியிருப்பாளர்களுக்கும் சிறுதொழில் வணிகர்களுக்கும் சுமார் 5 கோடி வெள்ளி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கூட்டரசுப் பிரதேச மாநிலத்தில் அரசாங்கத்திற்குச் சொந்தமான கட்டடத்தில் வணிகம் செய்பவர்களுக்கு கட்டட வாடகை வசூலிக்கப் படாது என்று முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × two =