குஷிரி சல்லே சரவாக் தெக்கூன் நேஷனல் மேலாளராக நியமிக்கப்பட்டார்

தேசிய தொழில்முனைவோர் பொருளாதார நிதி (தெக்கூன் நேஷனல்) குஷிரி சல்லேவை சரவாக் மாநில மேலாளராக நியமித்துள்ளது.
தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் வான் ஜுனைடி துவாங்கு ஜஃபார் கூறுகையில், குஷிரிக்கு விரிவான அனுபவம் மட்டுமின்றி சரவாக் தெக்கூன் நேஷனலை மேம்படுத்த பல திறமைகளும் உள்ளது என்று அவர் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
குஷிரியின் நியமனம் சரவாக் தெக்கூனின் சேவைகளை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வான் ஜுனைடி கூறினார்.
“வணிக சமூகத்திற்கு, குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர நிறுவன தொழில்முனைவோர்களை மேம்படுத்துவதில் அவருக்கு ஒப்படைத்த பொறுப்புகளை அவர் மிகவும் திறம்பட செய்து முடிப்பார் என்று நான் நம்புகிறேன்“ என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், 60 வயதான குஷிரி, சரவாக் தெக்கூன் நேஷனலை வழிநடத்த அவர் மீது நம்பிக்கையை வைத்ததற்காக வான் ஜுனைடிக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். சுற்றுலா, விளம்பரம், காப்பீடு, வணிகத் தொழில்கள் மற்றும் அரசாங்கத் துறையில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகால அனுபவமுள்ள குஷிரி, சரவாக் தெக்கூன் நேஷனலை மேம்படுத்த பல முயற்சிகளை மேற்கொள்ளுவதாக உறுதியளித்தார்.
“தெக்கூன் நேஷனல் ஒரு சிறந்த நிறுவனம். மேலும் சிறு வணிகர்களுக்கு, குறிப்பாக பூமிபுத்ரா சிறு வணிகர்களுக்கு, சரவாக் தெக்கூன் நேஷனல் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளும்“ என்று அவர் கூறினார். கம்போங் சந்துபோங்கில் இருந்து வந்த குஷிரி, பல சங்கங்களில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். மாநிலத்தின் அனைத்து 16 தெக்கூன் நேஷனல் கிளைகளையும் பார்வையிட திட்டமிட்டுள்ளார். இந்த நடவடிக்கை, சிறு வணிக சமூகத்தின் மேம்பாட்டிற்காக அனைத்து கிளைகளிலும் எடுக்கப்படும் நடவடிக்கைகளை அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.
தெக்கூன் நேஷனல் என்பது தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சகத்தின் (ஆநுனுஹஊ) கீழ் உள்ள ஒரு நிறுவனமாகும். பூமிபுத்ரா தங்கள் வணிகத்தைத் தொடங்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் நிதி வசதிகளை வழங்குவதே தெக்கூன் நேஷனலின் கடமையாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × three =