குவான் எங் மீது ஒரே குற்றச்சாட்டை இரு முறை சுமத்த முடியுமா?

ஒருவர் மீது ஒரே குற்றச்சாட்டை இரு முறை சுமத்துவதற்கு சட்டத்தில் இடமில்லை என்று ராம்கர்ப்பால் சிங் குறிப்பிட்டுள்ளார்.
2015ஆம் ஆண்டு பினாங்கில் லிம் குவான் எங் பங்களா வீட்டை சந்தை விலைக்கும் குறைவான விலையில் வாங்கிய விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டு,
பின்னர் அந்த வழக்கு மீட்டுக் கொள்ளப்பட்டது.
அந்த வழக்கை மீண்டும் அவர் மீது சுமத்த முடியாது என்று ஜசெகவின் ராம்கர்ப்பால் சிங் குறிப்பிட்டுள்ளார்.
இது பற்றிக் குறிப்பிட்டுள்ள அரசியலமைப்பு விதி பிரிவு 7(2)இல், ஒரே வழக்கு சம்பந்தமாக ஒருவர் மீது இரு முறை குற்றம் சுமத்த முடியாது என்றும் அவர் குற்றவாளி என்ற தீர்ப்பை ரத்து செய்த பின்னர், உயர்நீதிமன்றத்தில் மறுபடியும் வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும். புதிய ஆதாரங்கள் கிடைத்தாலும் லிம் மீது மறுபடியும் குற்றம் சுமத்த முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.
அது சம்பந்தமாக ஊழல் தடுப்பு ஆணையம் மீண்டும் விசாரிக்க தடையில்லை. ஆனால், அதே குற்றத்திற்காக லிம் குவான் எங் மீது இரண்டாவது முறையாகக் குற்றம் சாட்ட முடியாது என்று அவர் தெரிவித்தார்.
அந்த பங்களா விவகாரம் சம்பந்தமாக லிம் குவான் எங் மற்றும் வர்த்தகர் ஃபாங் லி கூன் ஆகியோர் மீதான குற்றச்சாட்டிலிருந்து 2018 செப்டம்பர் மாதம் விடுவிக்கப்பட்டனர்.
2014ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி, லிம் குவான் எங் தமது முதலமைச்சர் பதவியைத் துஷ்பிரயோகம் செய்து, மேக்னிபிஷன்ட் எம்ப்லெம் நிறுவனத்தின் விவசாய நிலத்தைக் குடியிருப்பு நிலமாக பட்டாவை மாற்றும் விண்ணப்பத்தை அங்கீகரிக்க ஒப்புதல் கொடுத்ததாக அவர்கள் இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen + four =