குவான் எங்கிற்கு எதிராக மேலும் 2 குற்றச்சாட்டுகள்

பினாங்கு முன்னாள் முதலமைச்சர் லிம் குவான் எங் நாளை வெள்ளிக்கிழமை பட்டர்வொர்த்தில் மேலும் 2 புதிய ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கவுள்ளார்.
முன்னாள் நிதியமைச்சருமான லிம், நாளை குற்றஞ்சாட்டப்படுவார் என அரசு தரப்பு துணை வழக்கறிஞர் வான் ஷஹாருடின் வான் லாடின் நேற்று இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் கூறினார்.
குற்றவியல் சட்டத்தின் 403 பிரிவின் கீழ் லிம்மீது 2 ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பான கடிதத்தைத் தாங்கள் பெற்றதாக லிம்மின் வழக்கறிஞர் கோபிந்த் சிங் டியோ உறுதிப்படுத்தினார்.
கடலடி சுரங்கப்பாதைத் திட்டத்தில் ஊழல் புரிந்ததாக கடந்த மாதம் லிம்மிற்கு எதிராக 2 குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டன.
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து ஜசெக பொதுச் செயலாளருமான லிம் விசாரணை கோரினார்.
இந்தத் திட்டத்திற்கு ஸெனித் கட்டுமான நிறுவனத்தை நியமிக்க அந்நிறுவனத்தின் மூத்த இயக்குநர் ஷாருல் அமாட்டிடம் 33 லட்சம் வெள்ளி கையூட்டு வாங்கியதாக லிம்மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − eighteen =