குழாய் நீர் பாதுகாப்பு நடவடிக்கையை சிலாங்கூர் முடுக்கி விட்டுள்ளது

0

சீனப் புத்தாண்டு காலத்தில் குழாய் நீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, சிலாங்கூர் மாநில அரசாங்கம் பாதுகாப்பு நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளது.
இந்நடவடிக்கை நேற்று முதல் ஜனவரி 31ம் தேதி வரை 24 மணி நேரமும் மேற்கொள்ளப்படும் என்று சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார். பல அரசாங்க நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக சிலாங்கூர் மற்றும் கோலா லங்காட் ஆற்றில் மேற்கொள்ளப்படும். சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ரா ஜெயா பகுதிகளில வாழும்
90 விழுக்காட்டு மக்களுக்கு இந்த இரண்டு நீர் மூலங்களில் இருந்து குழாய் நீர் கிடைப்பதால் அவை பாதுகாப்பு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியம் (லுவாஸ்), சிலாங்கூர் சுற்றுச்சூழல் இலாகா (ஜாஸ்), சிலாங்கூர் நீர் நிர்வாக நிறுவனம், இண்டா வாட்டர் கூட்டமைப்பு ஆகிய நிறுவனங்கள் இந்தக் கூட்டு நடவடிக்கையில் உட்படுத்தப்படும். லுவாஸ், இந்நிறுவனங்களைத் தலைமை தாங்கும். சீனப் புத்தாண்டைத் தவிர்த்து இதர பெருநாள் காலங்களிலும் இந்தக் கட்டுப்பாட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
குழாய் நீரின் மூலமாகத் திகழும் இந்த ஆறுகளில் குப்பைகளையும் கழிவுப் பொருள்களையும் கொட்டும் பொறுப்பற்ற தரப்புக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும். இந்த நடவடிக்கைகையைக் கண்காணிக்க சுமார் 200 அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பெருநாள் காலங்களைத் தவிர்த்து ஏனைய நாட்களிலும் இந்த ஆறுகள் கண்காணிக்கப்படும் என்று ஹீ சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here