குழந்தைக்கு மது கொடுத்த ஆடவர் கைது


பினாங்கு தெலோக் பாஹாங் குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டில் குழந்தை ஒன்றுக்கு மது கொடுத்த ஆடவர் ஒருவரின் காணொளி இணையதளத்தில் வைரலாக ஆனதை முன்னிட்டு, அதன் தொடர்பில் மலேசிய மலிவு விலை மது தடுப்பு இயக்கத்தின் தலைவர் டேவிட் மார்ஷல் பிறை காவல் துறையில் புகார் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து பினாங்கு, தென் மேற்கு மாவட்ட காவல்துறையினர் குழந்தைக்கு மது கொடுத்த ஆடவரை நேற்று மதியம் 1.30 மணி அளவில் கைது செய்ததாகத் தென் மேற்கு மாவட்ட காவல்துறைத் தலைவர் சுப்ரின்டெண்டன் சூப்ரிண்டன் கமாருள் ரிசால் கூறினார்.
மது கொடுக்கப்பட்ட குழந்தை பாதுகாப்பாக இருப்பதாகவும் அந்த குழந்தைக்கு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டதாக கூறிய அவர் கைது செய்யப்பட்ட ஆடவரின் குற்றப் பின்னணியை ஆராய்ந்த போது அந்த ஆடவர் 14 குற்றவியல் தொடர்புடைய சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவர் என்பதுடன் அவரை தனது
இருப்பிடத்தை விட்டு மற்ற மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு காவல்துறையின் கண்காணிப்பில் இருந்தவர் என்றும் ஏசிபி கமாருள் ரிசால் விவரித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen + two =