குளுவாங் ஹஜி மானான் சாலை தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் குடும்ப தினக் கொண்டாட்டம்

0

குளுவாங் ஹஜி மானான் சாலை தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் 10 ஆம் குடும்ப தினக் கொண்டாட்டம் பள்ளி வளாகத்தில் பல்வேறு போட்டி அங்கங்களுடன் நடைபெற்றது.
இந்த குடும்ப தினக் கொண்டாட்டத்தில் கலந்து சிறப்பித்த அன்பர்களுக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்து ஆதரவுக் கரம் நல்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்கொடை வழங்கி உதவிய நன்நெஞ்சர்களுக்கும் நன்றி பாராட்டிய ஹஜி மானான் தமிழ்ப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் ஆ.முகுந்தன் 1970 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரை இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் அனைவரும் சங்கத்தில் இணைவதற்கு முன் வரும்படி அழைப்பு விடுத்தார்.
கடந்த கால பசுமையான நினைவுகளுடன் ஆர்வத்துடன் போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு சங்கத்தின் தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் பரிசுகளை வழங்கி குதூகலம் அடையச் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six + two =