குற்ற நடவடிக்கைகள் குறித்து புகார் செய்வதற்கு தகுந்த வழிகளை பயன்படுத்துங்கள்!

தங்களின் பாதுகாப்பை முன் னிட்டு கிரிமினல் நடவடிக்கை களை புகார் செய்பவர்கள் சரியான முறைகளை பயன் படுத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ஹம்ஸா ஸைனுடின் கூறினார். இதில் சட்டத்திற்கு புறம்பான சூதாட் டங்களும் அடங்கும்.
சுங்கை பூலோவில் சூதாட்ட நடவடி க்கைகளை வெளிச்சத் திற்கு கொண்டுவந்த பெர்கர் விற்பனை யாளர் முகமட் அஸ்ரி ஹமிட்டிற்கு, (42) நன்றி கூறிய அமைச்சர் இணையத்தில் தகவல்களைப் பரப்புவது அதனை வழங்குபவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்று எச்சரித்தார்.
கிரிமினல் வழக்குகளில் தகவல்களை வழங்குவதற்கு பொதுமக்கள் ஊக்குவிக்கப்படு கின்றனர். எனினும் அவர்களின் நடவடிக்கை சட்டத்திற்கு உட்பட்டிருக்க வேண்டும். ஏற் படும் விளைவுகளைச் சிந்தித்து செயல்பட வேண்டும்.
இணையத்தளங்களில் வேக மாக வைரலாகும் அளவிற்கு குற்றச் சாட்டுக்களைக் கூற வேண்டாம். தயவு செய்து புகார் செய்யுங்கள். சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பார்கள் என்று திங்கள் கிழமையன்று பண்டார் பாரு சுங்கை பூலோவில் செய்தியா ளர்களைச் சந்தித்த போது அமைச்சர் கூறினார்.
இதன் தொடர்பாக ஹாட் பெர்கர் மலேசிய முகநூலிலும் அஸ்ரி ஜங்குட் என்ற பெயரில் தனது கணக்கிலும் அந்த பெர்கர் விற்பனையாளர் முகமது அஸ்ரி ஒரு காணொளியை வெளியிட்டி ருந்தார். அது வைரலாகி மற்ற இணைய வலைத்தளங்களிலும் பரவியது குறிப்பிடத்தக்கது.
அக்காணொளியில் சுங்கை பூலோவில் சூதாட்ட நடவடிக்கைகள் நடைபெறுவ தாகவும் அவற்றின் மேல் போலீ சார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் முகமட் அஸ்ரி குற்றஞ்சாட்டியிருந்தார். அத்துடன் சூதாட்டங்கள் நடை பெறும் இடங்களைப் பற்றியும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
முகமட் அஸ்ரியின் மேல் நடவடிக்கை எடுக்கப்படுமா என்று வினவியபோது அவரின் குற்றச்சாட்டுத் தொடர்பாக அவர் விசாரிக்கப்படுவார் என்று அமைச்சர் கூறினார்.
காணொளியின் மூலம் அந்த சூதாட்ட நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியதற்காக தமக்கு ஆபத்து ஏற்படும் என்று முகமட் அஸ்ரி கூறியிருப்பதால் அவரின் பாதுகாப்புக்கு போலீஸ் முன்னுரிமை அளிக்கும் என்று ஹம்சா கூறினார்.
அதே சமயத்தில் அத்தகைய சூதாட்ட நடவடிக்கைகளுக்கு போலீசார் பாதுகாப்பு அளித்த னர் என்று விசாரணையில் கண்டறியப்பட்டால் சம்பந்தப் பட்ட போலீஸ் அதிகாரிகளின் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித் தார்.
இதற்கிடையே சுங்கை பூலோ வட்டார போலீஸ் தலைவர் ஷாபாடோன் அபு பாக்கார், அந்த பெர்கர் விற்பனையாளர் முகமட் அஸ்ரியின் குற்றச்சாட்டை மறுத்தார். போலீசார் விசா ரணயை தொடங்கியிருப்பதாக வும் முகமட் அஸ்ரி தமது அறிக்கையை பதிவு செய்வதற்கு அழைக்கப்படுவார் என்று கூறினார்.
இதன் தொடர்பாக சிலாங் கூர் போலீஸ் தலைவர் நோர் அஸாம் ஜமாலுடின் கருத்துரைத் தார். சுங்கை பூலோவிலுள்ள பண்டார் பாரு பகுதியில் உள்ள சூதாட்ட மையங்களின் மேல் போலீசார் ஏற்கெனவே சோதனைகள் மேற்கொண்டி ருந்ததை நோர் உறுதிப்படுத்தி னார். ஆகக் கடைசியாக கடந்த சனிக்கிழமையன்று சோதனை நடத்தப்பட்டது.
கடந்த திங்களன்று அந்த சூதாட்ட நடவடிக்களை அமல்படுத்தியதற்காக போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) அப்துல் ஹமிட் பாடோர், முகமட் நஸ்ரியைத் தொடர்பு கொண்டு நன்றியைக் கூறினார்.
இதற்கிடையே சுங்கை பூலோவை சுற்றியுள்ள பகுதி களில் சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகள், சட்டத்திற்கு புறம்பான இடங்கள், சூதாட்ட மையங்கள் மற்றும் கடத்தப்பட்ட கிகரெட்டுகளை விற்பவர் களுக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர் என்ற குற்றச் சாட்டை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்கும் என அவ்வாணையத்தின் துணை ஆணையர் அகமட் ஹூஸைரி யஹாயா கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − sixteen =